பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يتتير .

து சுந்தர வடி வேலு 45 - _ அவர் நடத்திய சாரணப் பயிற்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவரோடு இரண்டு மூன்று சாரணப் பாசறைகளுக்கு, மிகுந்த மகிழ்ச்சியோடு போனேன். ஒரு முறை, அவர் தலைமையில், சாரணக்குழு பழைய சீவரம் சென்றது. அக்குழுவில் நானும் இருந்தேன். சென்றவர்களில், என்னுடன் படித்த சுப்பராவ் என்னும் நண்பரும் நானும் மட்டும் சைவ உணவினர். எல்லாரும் திருமுக்கூடலில், பாலாற்றில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவரையும் கிண்டல் செய்ய வேண்டுமென்று, இரண் டொரு சகாக்களுக்குத் தோன்றிற்று. தங்கள் துண்டுகளைப் போட்டு மீன்களைப் பிடித்தார்கள். அத்தனையும் பொடிசுகள். அவற்றைத் தண்ணிர் நிறைந்த புட்டியில் போட்டு மறைத்துக்கொண்டு வந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினோம். சமையல் நடந்து கொண்டிருந்தது. நண்பர்கள் புட்டியிலுள்ள மீன்களைக் காட்டி, அவற்றைச் சமைக்கப் போவதாகவும், பரிமாறப் போவதாகவும் சொன்னார்கள். நாங்கள் இருவரும் திடுக்கிட்டோம். எங்களுக்கு என்னவோ செய்தது. வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. 'மரக்கறி உணவே உண்போம் என்று அடம் பிடிப்பவர்களுக்குச்சாரண இயக்கத்தில் இடமில்லை என்று சிறு பிள்ளைகள் மிரட்டினார்கள். 'உண்ணாமல், பட்டினியாகவே இருப்போம்' என்று நாங்கள் இருவரும் மிரட்டினோம். அந்த நிலையில் சாரண ஆசிரியர் திரு. அரங்கநாதம் தலையிட்டார். விளையாட்டுக்குச் சொன்னதை மெய்யாகவே எண்ணி வேதனைப்பட வேண்டாம் என்று கூறி எங்களைத் தேற்றினார். 'கிண்டலை, யார் எவ்வளவு தூரம் தாங்குவார்கள் என்று உணர்ந்து, கிண்டல் செய்வதற்குத் தெரிந்து கொண்டால் மட்டுமே, நட்பு கெடாதிருக்கும் என்பதை மற்றவர்களுக்கு இனிமையாக எடுத்து ரைத்து, எங்களை அமைதிப்படுத்தினார். இந்த நல்ல சாரண ஆசிரியரின் மகன் திரு. விட்டோபாபு கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் உதவி இயக்குநராக உயர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஜப்பானில் பெரிய பூகம்பம் 1926 இல் ஏற்பட்டது. அழிவு அதிகம். ஜப்பானியர்களுக்கு உதவி செய்வதற்காக, நம் நாடு முழுவதும் நிதி கிரட்டப்பட்டது. எங்கள் பள்ளியிலும் நிதி திரட்டினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/87&oldid=787793" இலிருந்து மீள்விக்கப்பட்டது