பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தாவடி வேலு 47 - - பலரிடம் வேலை வாங்க வேண்டிய நிலைக்கு உயர்ந்துவிட்ட அனைவரும் இப்பாடத்தை மனத்தில் கொள்ளுதல் அவர்களுக்கும் நல்லது; அவரோடு பணி புரிவோருக்கும் உதவி. எத்தனையோ வித்தைகளைக் கற்றும், மெல்ல எறிய மட்டும் கற்றுக் கொள்ளாததால், மக்களைத் தேவைக்கு அதிகமாகத் துன்புறுத்தி, அவ்வேழைகள் பொழிந்த கண்ணிர் வெள்ளத்தில் சிக்கித் திண்டாடிய சிலரை, பிற்காலத்தில் நான்கான நேர்ந்தது. 'கடிதுஒச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர்' எதை எதையோ எட்டிப் பிடிக்க வேண்டுமென்று நினைப்போர், இக்குறளை நாள்தோறும், மும்முறை நினைவுபடுத்திக் கொள்வார்களாக. என் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாக்கள் சிறப்பாக நடக்கும். விழாக் கூட்டங்களில் எல்லா மாணவர்களுக்கும் இடம் கொடுக்க இயல்வதில்லை. எனவே, பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும், பரிசு பெறுபவர்களுக்கும் மட்டுமே இடம் கொடுப்பார்கள். நான், ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பில் பரிசுகள் பெறுவேன். எனவே, எல்லா ஆண்டுகளிலும் விழாக்களில் கலந்து கொண்டேன். விழாவின்போது, தலைமையாசிரியரும், பிற பட்டதாரி ஆசிரியர்களும் தத்தம் பட்டத்திற்குரிய சிறப்பு கெளனில் வருவது வழககம. பிற்காலத்தில், அந்த கெளன். ஊர்வலத்தில், நானும் பத்தொன்பது ஆண்டுகள் நடக்க நேரிடும் என்று யாரும் கனவு காணவில்லை. ஒர் ஆண்டு விழாவிற்கு, அப்போது நடைபெற்ற இரட்டை ஆட்சியில் கல்வி அமைச்சராக விளங்கிய திரு ஏ.பி. பாத்ரோ தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் திரு. ஞானாதிக்கம், தம் வரவேற்பு உரையில் அப்போதைய அரசின் கல்விக் கொள்கையை எடைபோட்டு மாறுபட்ட தமது கருத்துகளைக் கூறினார். அவற்றைக் கேட்டுவிட்டு, திரு பாத்ரோ சங்கடப்படவில்லை. முகம் சுளிக்கவில்லை; சலித்துக் கொள்ளவில்லை; வெகுளவும் இல்லை. மாறாக, தம் உரையில், அவற்றை மதித்துக் குறிப்பிட்டார். பல கோணங்களிலிருந்து, கல்வி கோட்பாடுகளையும் அமைப்பு ளையும் ஆய வேண்டும். ஆசிரியர்களும் பள்ளிகளை '-த்துபவர்களும் அப்படி ஆய்ந்து பார்த்து. கருத்துகளைச்சொன்னால், பொது மக்களுக்கு நன்மையான கல்வியைக் கொடுக்க வழி பிறக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/89&oldid=787795" இலிருந்து மீள்விக்கப்பட்டது