பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 49 முன்பு அவை எப்படியிருந்திருப்பினும் நான் மாணவனாக இருந்த காலத்தில் கிறுத்துவப் பள்ளிகள் எல்லாருடைய நம்பிக்கைக்கும் உரியனவாகவே நடந்து வந்தன. அந்தக் காலக் கிறுத்துவ ஆசிரியர்கள், கிறுத்துவ மாணவர்களை மட்டும் ஊக்குவிப்பவர்களாகச் செயல்படவில்லை. எல்லாரையும் ஆதரித்தார்கள். அகப்பட்டதையெல்லாம் கிறுத்துவமயமாக்கும் கிறுத்துவ அருளுக்குப் புறம்பான முனைப்பில் அவர்கள் அப்போது செயல் படவில்லை. மற்றப் பள்ளிகளில் ஆதரிக்கப்படாதவர்களுக்கெல்லாம் தக்க சரணாலயங்களாக, கிறுத்துவ கல்விக் கூடங்கள் சிறப்பாக இயங்கின. கிறுத்துவர்களுக்குச்சலுகையும் பிற சமயத்தவருக்குத் தொல்லையும் கொடுக்க அக்காலக் கிறுத்துவ ஆசிரியர்கள் முனைந்ததில்லை. எனவே நாட்டுப்புறத்தாரும் கிறுத்துவக் கல்விக்கூடங்களை நம்பினார்கள். செய்வன திருந்தச் செய்தல் என் தந்தையின் இயல்பு. என் தாயும் அரைகுறை ஈடுபாட்டை அறியாதவர். அப்படியிருக்க அவ்வியல்பு என்னை மட்டும் விட்டுவிடுமா? படித்த பைபிளை, ஒப்புக்காகப் படிக்காமல், ஆர்வத்தோடு படித்தேன். புதிய ஏற்பாட்டினைக் கீழ் வகுப்புகளில் தமிழில் படித்தேன். மேல் வகுப்புகளில் ஆங்கிலத்தில் கற்றேன். வேத பாடத்தில் ஒவ்வோர் ஆண்டும் முதல் பரிசையோ இரண்டாம் பரிசையோ தட்டிக்கொள்ளுவேன். கிறுத்துவ வேதத்தைப் படிக்க நேரிட்டதை, தாம் பெற்ற நற்பேறாகக் கருதினார், தமிழ்த்தென்றல், திரு.வி. கலியாணசுந்தரனார். பல்துறைத் தொண்டில் தோய்ந்திருந்த தமிழ்ப் பெரியார், அப்படிக் கருதியது மிகைபடக் கூறியதல்ல. இதை நான் என்னுடைய எளிய வாழ்க்கையில் உணர்கிறேன். நான் பைபிளைப் படித்ததைப் பற்றி மகிழ்கிறேன். பெருமைப்படுகிறேன். அப்பாடம், இன்றும் சறுக்கு நிலத்தில் உதவும் ஊன்றுகோலாக எனக்குப் பயன்பட்டு வருகிறது. பசுமையான உள்ளம் உடைய இளமைப்பருவத்தில் ஏசுநாதரின் அருமையான மலைப் பொழிவையும் பிற அறவுரைகளையும் கேட்பது, கேடில் விழுச்செல்வமாகும்.

  • வைதீகர்களிடம் கண்ட சமரச உணர்வு

ം: நான்காம் படிவத்தில் கணக்குப் பாடம் கற்பித்த திரு. *ாத்திரி அய்யங்கார் வீர வைணவர்; உயரமானவர். எலுமிச்சம் பழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/91&oldid=787798" இலிருந்து மீள்விக்கப்பட்டது