பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஆதி திராவிடருக்கு உரிய இடம்

வட்டிலே தான் ஒதுக்கீடு

அன்றைய சேலம் மாவட்டத்திற்கு ஆண்கள் பயிற்சிப் பள்ளி ஒன்று மட்டுமே இருந்தது.

மேட்டுரில் செயல்பட்ட அப்பள்ளியில், ஆண்டுக்கு நாற்பது பேர்களைமட்டுமே சேர்க்கலாம். எட்டாவது தேர்ச்சி பெற்றவர் களுக்காக அந்தப் பயிற்சிப் பள்ளி.

அக் காலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு நூற்றுக்குப் பத்து விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் ஆணை. அப்படி நடந்ததா?

‘இல்லை என்று என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.

ιιιτή ?

நாமக்கல்லைச் சேர்ந்த முத்துசாமி என்ற ஆதிதிராவிடத் தலைவர். அவர், “சமத்துவம் என்ற பெயரில் ஒர் இதழை நடத்திக் கொண் டிருந்தார். அதில் பெரும் பொருள் இழந்தார்.

முற்காலத்தில் சமுதாயத் தொண்டு புரிந்த பலர் இப்படித்தான் தங்களைச் சிதைத்துக் கொண்டார்கள்.

தோழர் முத்துசாமி என்னைப் பேட்டி கண்டார். ‘அய்யா! நான் சொல்லுகிறேனென்னு வருத்தப்படாதீர்கள். மெட்டுர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் எங்கள் பிரிவினருக்கு நான்கு டிடங்கள் உண்டு.

‘ஆனால், சென்ற இரண்டு ஆண்டுகளில், ஒர் ஆதிதிராவிடரும்

சேர்க்கப்படவில்லை.

‘எனக்குத் தெரிந்த சிலர் மனு செய்திருந்தார்கள். அவர்கள் பெட்டிக்குக்கூட அழைக்கப்படவில்லை.

‘அய்யா காலத்திலாவது, எங்களுக்கு நீதி கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று முறையிட்டார்.

‘அப்படியிருக்காது’ என்று எனது கல்வித் துறையை விட்டுக் கொடுக்காமல் பதில் கூறி அனுப்பினேன்.

உண்மையைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, முந்தைய ஆண்டு _ளின் கோப்புகளை வாங்கிப் பார்த்தேன். நெருப்பில்லாமல் புகை

-11 III, II, III

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/171&oldid=623067" இலிருந்து மீள்விக்கப்பட்டது