பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ E8 நினைவு அலைகள்

கருத்தரங்கம் பதினைந்து நாள்கள் நடக்கவேண்டும். அதில் முப்பது பேர்களாவது பங்கு கொள்ள வேண்டும்.

மக்களாட்சி உரிமையைக் காக்கும் பொருட்டே, அப்போர் நடக்கிறது என்பதைத் தக்கார் உரைகளின் வாயிலாக விளக். வேண்டும்.

அதோடு மாணவர்கள் கலந்துரையாட் நிறைய வாய்ப்புக் கொடுக்க

வேண்டும்.

போருக்குப் பிறகு சமுதாயம் எப்படித் திருத்தியமைக்கப்ப வேண்டும் என்பதைப்பற்றிப் பேச, கவிதை புனைய, நாடகம் நடத்த, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இப்படி அரசு ஆணை வந்தது. s

கருத்தரங்கச் செலவு அரசு நிதியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கு, இரு மாணாக்கர் என்று தேர்ந்தெடுத்தேன். பயிற்சிப் பள்ளியிலிருந்து இருவர்; ஆசிரியர்கள் இருவர் என்று முப்பது பேர்களைத் தேர்ந் தெடுத்தேன்.

மேட்டுர் அணையில் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கருத்தரங்கம் நடந்தது.

அது பற்றிய சுற்றறிக்கையை உரியவர்களுக்கு அனுப்பினேன்.

மாணவர் வெங்கடாசலபதி வளர்ச்சி

மறுநாள் காலை என் வீடு தேடி இருவர் வந்தனர்.

சி

கணவனும் மனைவியுமாக வந்த அவர்கள் எவர்?

கல்லூரியிலிருந்து கருத்தரங்கிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆவர்.

o அவர்கள் எனக்கு நன்றி சொல்லவா வந்தார்கள்? இல்லை.

அம் மாணவரைக் கருத்த ரங் கிலிருந்து விடு விக்கும் படி வேண்டினார்கள்.

எதன் பொருட்டு?

‘எங்கள் பையன் வெங்கடாசலபதி பரம சாது. அவனாக, தனியாக எந்த ஊருக்கும் போனதில்லை. நாங்கள் அழைத்துப் போகும் இடத்திற்கு மட்டுமே வருவான்.

‘இப்போது தனியாக, பதினைந்து நாள்கள் மேட்டுருக்கு வயத் தயங்குகிறான். அழமாட்டாத குறையாக, எங்களை அனுப்பியுள்ளனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/184&oldid=623081" இலிருந்து மீள்விக்கப்பட்டது