பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"In *!:). ரவடிவேலு 183

ஒன்றரை அனாவில் சாப்பாடு

அன்று பகல் உணவுத் திட்டம் எப்படிச் செயல்பட்டது? முழுக்க முழுக்க, வரிப் பணத்திலிருந்து செலவிடப்பட்டது.

வழைப் பிள்ளைக்கு வேளைக்கு ஒன்றரை அனாவை அரசு, மாவட்ட ஆட்சிக் குழுவிற்கு அனுப்பியது.

ஆட்சிக் குழு, பிடித்தம் ஏதும் செய்யாமல், ழுழுப் பணத்தையும் பகல் உணவுக் குழுக்களுக்கு அனுப்பி வைத்தது.

பகல் உணவுக் குழுக்கள் அக்கறை காட்டினவா? காட்டின!

சில ஊர்களில், குழு உறுப்பினர்கள் முறை போட்டுக்கொண்டு மேற்பார்வை யிட்டார்கள்.

மொத்தம் பதினெட்டு ஊர்களில் பகல் உணவு போட்டதாக நினைவு.

காலனா மிச்சம்

அவற்றில், அயோத்தியா பட்டணம், மேச்சேரி ஆகிய இரு பார்களில் மிகச் சிக்கனமாக நடந்தது.

எவ்வளவு சிக்கனமாக?

வேளைக்கு, பிள்ளைக்குக் காலனா மிஞ்சிற்று. உணவின் அளவைக் குறைத்து மிச்சப்படுத்தினார்களா? இல்லை. உணவின் தரத்தைக் குறைத்தார்களா? இல்லை. பின் எப்படி மிச்சப்படுத்த முடிந்தது.

குழுத் தலைவர்கள், ஊரில் செல்வாக்கு உடையவர்கள் உணவுப் பண்டங்கள் வாங்குவதை அவர்களே நேரில் கண்காணித்தார்கள்.

அதனால், சற்று மலிவாகப் பண்டங்களை வாங்க முடிந்தது.

மிச்சப் பணத்தில் சீருடை

மிச்சப் பணத்தை என்ன செய்தார்கள்?

அதைச் சேமித்து வைத்தார்கள்! ஊரார் நன்கொடைகளையும் _றுடன் சேர்த்து, பகல் உணவு உண்ட ஏழைப் பிள்ளைகளுக்குச் _ அளித்தார்கள்.

வiல ஊர்களிலும் அல்ல. அயோத்தியா பட்டணம், மேச்சேரி ஆகிய இரு ஊர்களிலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/199&oldid=623097" இலிருந்து மீள்விக்கப்பட்டது