பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 நினைவு அலைகள்

‘இவரைச் சில ஆண்டுகளாகத் தெரியும். இவரும் நானும் ஏற்காட்டில் ஒரே கூடாரத்தில் தங்கியிருக்கிறோம் ‘ என்று அறிவித்துவிட்டு,

‘'நலந்தானா?’ என்று கேட்டார்.

என் சகாக்களின் கண்களில், நான் திடீரென மிகவும் உயர்ந்து விட்டேன்.

ஆண்டு விழா இனிது நடந்து முடிந்தது; முதலமைச்சரை வழி யனுப்பிய பிறகு, இயக்குநர், ரெட்டியார் என்னைப் பார்த்து,

முதலமைச்சர் உனக்கு இவ்வளவு வேண்டியவர் என்பதைக் காட்டிக் கொள்ளவே இல்லையே! ‘ என்று குற்றம் சாட்டும் பாவனையில் கேட்டார்.

‘முதலமைச்சர் பண்போடு, என்னைப் போன்ற அலுவலரை அடையாளம் காட்டுகிறார்.

‘'நான், அவ்வளவு பெரியவரிடத்தில் உரிமை கொண்டாடலாமா?” என்று மெதுவாகப் பதில் கூறினேன்.

‘நெ.து.சு. அளவுக்கு மீறிய தன்னடக்கம் உடையவர்’ என்று துணை இயக்குநர் வி.கே. கிருஷ்ணமேனன் இடைமறித்துச் சொல்லி, என்னைக் காப்பாற்றினார்.

ஆச்சரியமான மனிதன்

மறுநாள் அலுவலகத்தில், இயக்குநர் இதைப்பற்றி மீண்டும் பேசினார்.

இவ்வளவு வேண்டிய முதலமைச்சர் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் மட்டத்தில் உனக்குத் தீங்கு இழைக்கப்பட்டது.

உன் மாநகராட்சிப் பணிக்காலத்தை துணை இயக்குநர் பதவிக் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று விதிமுறைக்கு மாறாக கொடுத்த வாக்குறுதியையும் மீறி - ஆணை வந்தது.

‘அமைச்சர் பக்தவத்சலத்தைக் கொண்டும் அதற்குப் பரிகாரம் தேடவில்லை; உனக்கு வேண்டிய முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுபோய், நியாயம் பெற்றுக் கெளள்ளவில்லை. நீ ஆச்சரியமான மனிதன்’ என்று இயக்குநர் சதாசிவ ரெட்டி பாராட்டினார்.

நம்பிக்கை வளர்ந்தது

அப்போது, அவர் வேறொரு நிகழ்ச்சியையும் நினைவு படுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/400&oldid=623329" இலிருந்து மீள்விக்கப்பட்டது