பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 431

‘அப்போது ஆண்டுக்கு ஆண்டு, பள்ளியைவிட்டு நின்று விடுவோர் எண்ணிக்கை குறையும். தொடர்ந்து படிப்போர் எண்ணிக்கை பெருகும்.

‘ஆசிரியருக்கு ஒரு வகுப்பு என்கிற நிலையில் உள்ள பெரிய பள்ளிகளில் ‘குறிப்பிட்ட ஆசிரியர்’, ‘குறிப்பிட்ட வேளை’ மாணாக்கரில் பாதிப் பேர்களுக்கே கற்பிப்பார்.

‘அந் நிலை தேர்ச்சியினால் நூற்றுக்கு நூறாக உயரலாமே! அப்படிச் செய்து, பாதிநாள் படித்தாலும் தேர்ச்சி பெறும் நிலையில் படித்தார்கள் என்னும் நல்ல நிலையை உருவாக்கிப் பாருங்கள்’

மேற்கூறிய பாணியில் பேசினேன். அவையோர் அமைதியாகவும், அக்கறையோடும் கேட்டார்கள்.

அளவுக்கு மீறிய விளம்பரம்

நான் பேச்சை முடித்த அடுத்த நொடி,

‘சுதேசமித்திரன் - முதல் பக்கம்’ என்று முதல் அமைச்சர் இராசாசி, எல்லோருக்கும் கேட்கும் வகையில் செய்தியாளர்க்குக் குறிப்புக் காட்டினார்.

முதல் அமைச்சர், தமது உரையில், இரண்டு மூன்று முறை என்னைக் குறிப்பிட்டுப் பாராட்டினார், பின்னர் தனியாகவும் ‘ரொம்ப நன்றாகப் பேசுகிறீர்கள்’ என்று கூறிப் பாராட்டினார்.

இரவு வண்டியில் சென்னைக்குத் திரும்பினோம்.

குத்துாசியின் எரிச்சல்

மறுநாள் மாலை நிகழ்ச்சி ஏதுமில்லை. வழக்கம்போல் அருகில் இருந்த, என் சகலர் குத்துசி குருசாமி அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

உள்ளே நுழையும்போதே, மாமனார் சுப்பிரமணியம், “ஆமாம் தம்பி, வேலையில் இருந்தால், அரசு திட்டத்தை ஆதரித்துத்தானே ஆகவேண்டும்’ என்று சொல்லியபடியே வரவேற்றார்.

மாடியில் இருந்த அண்ணனையும், அண்ணியையும் கண்டேன்.

அண்ணன் கையில், ‘சுதேசமித்திரன்’ நாள் இதழ் இருந்தது.

அதன் முதல் பக்கத்தில் முழுப் பக்கத் தலைப்புக் கொடுத்து எனது ஆம்பூர் பேச்சு வெளியிடப்பட்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/447&oldid=623380" இலிருந்து மீள்விக்கப்பட்டது