பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 நினைவு அலைகள்

அப்படி ஒருவரும் இல்லை. இந்திய சிவில் பணியைச் சேர்ந்தவர்கள் அனைவருமே அதிகப் பணி மூப்பு உடையவர்கள்; இந்திய ஆட்சி அணியைச் சேர்ந்தவர்களில் கூட, தகுதியானவர்கள் இயக்குநர் பதவிக்கும் மேற்பட்ட நிலைக்கு உரியவர்கள்.

‘ஆனால், அரசு பார்த்து, அவர்களில் ஒருவரை இயக்குநராக நியமிப்பதானால் அதை ஏற்றுக் கொள்ளும் அளவு கட்டுப்பாடு உடையவர்கள்; அத்தகைய ஒருவரைத் தேடட்டுமா?”

‘ஆணைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக, இயக்குநர் பதவியை ஏற்பவர், ஆர்வம் காட்டுவார் என்று எதிர்பார்க்க இயலாது. பதவி கிடைக்காத எரிச்சலில் துணை இயக்குநர்கள் இருவருமே ஏனோதானோ என்று வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகி விடும். கல்வித்துறை பாழாகிவிடும்.

‘கல்வியின்பால் ஈடுபாடு உடைய இந்திய ஆட்சி அணியினர் எவரும் இல்லாததால், துணை இயக்குநர் இருவரில் ஒருவரை நியமிப்போம்.

‘இயக்குநர் பதவி, பணிமூப்பு அடிப்படையில், நிரப்பப்பட வேண்டியதா? தகுதி அடிப்படையில் கொடுக்கப்படவேண்டியதா? என்றார் முதலவர்.

‘அதுவரை இரு துணை இயக்குநர்களின் பெயரும் வெளியிடப்

படவில்லை.

‘தகுதி உயர்வு பற்றியே, இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.

‘இப் பதவியைப் பொறுத்தமட்டில், உரிமை உடைய இரு துணை இயக்குநர்களின் இரகசியக் கோப்புகளையும் சென்னை மாகாண அரசு ஊழியர்கள் பொறுக்கு ஆணையகத்திற்கு அனுப்பி, எவருடைய தகுதி அதிகமென்று ஆணையத்தின் கருத்தைக் கேட்டுக்கொள்ளட்டுமா? என்று தலைமைச் செயலர் முதல்வரிடம் கேட்டார்.

“எங்களுக்கு உங்கள் மதிப்பீட்டில் நம்பிக்கை இருக்கிறது. நீங்களே

பார்த்துச் சொல்லலாம்’ என்றார் முதலமைச்சர் காமராசர்.

‘இருந்தாலும் ஆணையத்தின் கருத்தை அறிந்துகொள்ள விடுங்கள்’ என்று வேண்டினார் தலைமைச் செயலர்.

தேவை இல்லாததைச் செய்து, அதை ஒரு மரபாக்கிவிடாதீர்கள் என்றார் முதல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/474&oldid=623410" இலிருந்து மீள்விக்கப்பட்டது