பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நினைவு அலை.

திரு. இரகுநாதன், நொடியில் அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார்.

‘ஒவ்வொன்றினுக்கும் ஒரு வரம்பு உண்டு. வெகுளிக்கும் வரம்பு வேண்டும். உடனே தந்தி கொடுத்திருக்கக் கூடாதா? முகத்தையாவது பார்த்திருக்கலாம். தகனம் ஆன பிறகு, தெரிகிறது; பார்த்து ஆறுதல் அடையும் வழியில்லை. என்ன செய்வது?

‘நல்லது கெட்டது மாறிமாறி வரும். இரண்டையும் ஏற்றுத் தாங்கிக் கொள்வதைவிட வழியில்லை.

‘இங்கிருந்தபடியே உங்கள் ஊருக்குச் செல்ல விரும்பினால், அப்படியே செய்யலாம். நெடும் பயணத்திற்கு வேண்டிய பணம் கொண்டு வராதிருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நான் கை பதிலாகத் தருகிறேன். ஊருக்குப்போய் வாருங்கள்’ என்றார் இரகுநாதன்.

‘முதலில் கோவைக்குச் செல்கிறேன். நாளை அங்கிருந்து ஊருக்குப் போய் வருகிறேன். மூன்று நாள்களுக்கு விடுப்பு கொடுங்கள்’ என்றேன்.

‘அதற்கென்ன? உடனே புறப்பட்டுச் செல்லுங்கள்’ என்று சொல்லிப் பரிவுடன் விடை கொடுத்தார்.

‘பயணிகள் விடுதிக்குச் சென்றதும் முதலில் தலைமுழு ெ விடுங்கள். அப்புறம் சிறிது தெளிவு ஏற்படும்; பயணத்தில் தொல்லை தோன்றாது’ என்று தலைமை ஆசிரியர் வழிகாட்டினார்.

பயணிகள் விடுதிக்கு விரைந்தேன்; அறைக்குள் நுழைந்ததும் அழுதேன்; அழுதேன்; விம்மி, விம்மி அழுதேன். பல மணித்துளிகள் அழுதேன்.

‘அழுது பயன் இல்லை’ என்றது அறிவு. ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?’ என்று முணுகிற்றுப் பழம் பாடல்.

‘காலை மனந்த மணாளன் மாலை மறைந்தாலும் துக்கம் விசாரிக்க வந்திருப்போர் முன், இளம் விதவை அலறி அழக் கூடாது’ என்பது ஜப்பானின் புது நெறி.

‘அத்தகைய உறுதிப்பாடு நமக்குள் வளரவேண்டும்! இப்படி ஒரு கட்டுரை, கல்கத்தாவில் இருந்து வெளிவந்த “மாடர்ன் ரெவியூ” என்ற திங்கள் இதழில் வெளியாகி இருந்தது.

அதைக் கருப்பொருளாகக் கொண்டு, ஜப்பானில் நவயுகம் என்று தலைப்பு இட்டுக் கட்டுரை ஒன்றை எழுதி, உத்தமபாளையம் ‘பாரதி’ இதழில் வெளியிட்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/48&oldid=623416" இலிருந்து மீள்விக்கப்பட்டது