பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி| து சு ந்தரவடி வே gy/ 39

‘முடியாது; அது முடியாது’ என்று பல்லவியை மட்டும் மெல்லிய குயலில் பாடி முடித்தேன்.

அன்று பிற்பகல் மாகறலில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் சென்றடைந்தேன். அங்கிருந்து இரயில் ஏறி, அரக்கோணம் வழியாக, கொயம்புத்துருக்குத் திரும்பினேன்.

றிெய தாயாரின் விருப்பத்தைப் பல்லாண்டுகள் வரை காந்தம்மாவின் காதுகளில் போடவில்லை.

5. பயிற்சி முடிந்தது

தந்தையின் தனித் தன்மை

நான் உடலால், கோவைக்குத் திரும்பிவிட்டேன். இருப்பினும் iளத்தால், நெய்யாடுபாக்கத்திலும் மாகறலிலும் இருந்தேன்.

கல்வி அலுவலர் பயிற்சியில் ஈடுபட முயன்றேன். ஆனால் அதில் lெதனை செல்லவில்லை. மாறாக நெய்யாடுபாக்கம், மாகறல் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளேயே என் சிந்தனை சுழன்றது.

‘என் தாய் என்னைப் பெற்று வளர்க்க எத்தனை பாடு பட்டார். ஆயினும் என்னிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை.

‘சில அன்னையர்போல், இந்த உறவுப் பெண்ணைக் கட்டி வைக்கவோ, அந்த உறவுப் பெண்ணைக் கட்டிவைக்கவோ அவர் முனைந்ததில்லை.

‘எனவே, என் திருமணம் பற்றி என் தாய்க்கு ஏன் மனக்குறை? சாதி ம.ணர்வால் மனக்குறை. இயற்கையான உணர்வா. இது? இல்லை. மழலைப்பருவம் முதல் ஊட்டப்பட்ட உணர்வு.

‘நாங்கள் பிறவியில் உயர்ந்தவர்கள் என்றும் வேறு பலர் தாழ்ந்தவர்களென்றும் கருதியதால், நான் சாதி கெட்டவனானதைப் பற்றி வேதனைப்பட்டார்.

தன் கணவன் விரும்பாததை நினைக்காத பண்பாட்டில் வாழ்ந்ததால், எனக்குத் திருட்டுத்தனமாகவும் தன்நிலையைச் சொல்லி அனுப்பவில்லை.

என் தந்தை நிலை என்ன? சாதி உணர்வு மழுங்கியவர். வைக்கம் போட்ட எதிரொலியாக, எங்கள் வீட்டிற்குள் ஆதிதிராவிடப் பண்ணையாளைத் தாராளமாக வரவிட்டவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/55&oldid=623424" இலிருந்து மீள்விக்கப்பட்டது