பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 43

சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையத்தான் பிறந்தோமா?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த இக் கேள்விகள் இன்று மூச்சுக்கு மூச்சு வெளிப்படுகின்றன. இப்படி இருக்கலாமா?

சிகாகுளத்திற்கு நியமனம்

முடங்கிப் போன, என் சிந்தனை விடுபட, துாண்டுகோல் ஒன்று கிடைத்தது.

அது, சென்னை பொதுக்கல்வி இயக்ககத்தில் இருந்து வந்தது.

என்னுடைய பணிப்பயிற்சி முடிந்ததும் நான், வட விசாகப் பட்டின மாவட்டக் கல்வி அலுவலராகச் சேர வேண்டுமென்று, அவ்வாணை கூறிற்று.

அம்மாவட்டம், அன்று வருவாய்த்துறை மாவட்டம் அல்ல. பெரிய விசாகப்பட்டின மாவட்டத்தின் ஒரு பகுதி: கல்வித்துறை அலுவலுக்கு மட்டும் பிரிக்கப்பட்ட பகுதி.

அந்தக் கல்வி மாவட்டத்தின் தலைநகரம் எது? சீகாகுளம்.

அந் நகரத்திற்கு எப்படிப் போய்ச் சேருவது? எத்தனை நாளில் போய்ச் சேருவது? அங்கே எளிதில் வீடு கிடைக்குமா? வேலைக்கு ஆள் கிடைக்குமா?

இத்தகைய சில்லறைக் கவலைகளில் கவனம் திரும்பிற்று.

சென்னை மாகாணத்தில் வடகோடிப் பகுதியாகிய அதைப் பற்றி எவருக்கும் அதிகம் தெரியவில்லை.

கோகுளத்திற்குப் புகைவண்டி கிடையாது. அதற்கு அருகாமையில் உள்ள புகைவண்டி நிலையம் ஆமதாலவலசா” என்னும் பெயர்

ா டையது.

அங்கே, கல்கத்தா செல்லும் விரைவு வண்டி நிற்கும். அங்கே இறங்கி, பேருந்து வண்டியிலோ, குதிரை வண்டியிலோ, பதினோரு ேெலா மீட்டர் தொலைவு பயணம் செய்தால், சீகாகுளம் நகரத்தை அடையாளம் என்பது மட்டுமே கோவையில் கேள்விப்பட்டேன்.

நான் 1942 நவம்பர் முதல் நாள் சீகாகுளத்தில் அலுவலர் பொறுப்பு வற்கவேண்டும்.

ஆமதாலவலசா சென்று அடையும் கல்கத்தா மெயில் மாலை ஐந்து மணி அளவில் அங்குப் போய்ச் சேரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/59&oldid=623428" இலிருந்து மீள்விக்கப்பட்டது