பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நினைவு அலைகள்

பில்லை சேவகர்கள், இரயில் பெட்டிக்குள் தாவினார்கள். எங்கள் பெட்டி பேழைகளை இறக்கி வைத்து, சரிபார்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.

என் மனைவி, தணிக்கை செய்து சரியாக இருப்பதாகக் கூறினார்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு நின்ற காவலர், வண்டியை விடலாமாவென்று கேட்டார். ஆம் என்று நான் சொன்னதும் விசில் அடித்தார். வண்டி புறப்பட்டது.

நாங்கள் புகைவண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். எங்களுக்குப் பின்னால் வந்த பயணி ஒருவர் எங்களை முந்த முனைந்தார். நான் வழிவிட்டு விலகினேன்.

முன்னேறியவர், சும்மா செல்லவில்லை. எங்கள் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் ஏதோ கேட்டார்.

அதற்கு அவர், ‘சீகாகுளத்திற்குப் புதிதாக வந்துள்ள மாவட்டக் கல்வி அலுவலர்’ என்று பதில் கூறினார்.

அப் பயணி எரிச்சல் கொண்டார்.

‘எந்துக்கு ஈ அரவவாடு இக்கட வஸ்தாரு என்று அதிருப்தியுடன் சொல்லிக்கொண்டே நடந்தார்.

பயணியின் முதற் கேள்வியும் பிந்திய எரிச்சல் கூற்றும் என் செவிகளில் வீழ்ந்தன. ஆனால் எனக்குப் புரியவில்லை.

‘மெளனம் கலக நாசம் இது நினைவிற்கு வரவும் ஊமையாக நடந்தேன்.

எல்லோரும் வெளியே வந்தோம். அருகிலிருந்த பேருந்து வண்டியின் முன் இரு இருக்கைகளைக் காட்டி, அவற்றில் எங்களை அமரும்படி மிகப் பரிவுடன் வேண்டிக் கொண்டார்கள்.

‘சீகாகுளத்தில் கார் கிடைக்கவில்லை. பேருந்து அல்லது குதியை வண்டியில்தான் இங்கிருந்து அங்குச் செல்ல வேண்டும் என்று விளக்கம் சொன்னார்கள்.

நாங்கள் வசதியாக அமர்ந்தோம். பின் வரிசைகளில், புளி மூட்டைகளைப்போல மக்கள் திணிக்கப்பட்டார்கள்.

மாலையில், ஒரே ஒரு பேருந்து ஒடும் நிலையில் எல்லோரையும் எப்படியாவது இட்டுக்கொண்டு போவதே, பொது நன்மையாகும் என்பது விளங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/62&oldid=623432" இலிருந்து மீள்விக்கப்பட்டது