பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 65

| so a 19. @

பர்மாவிலிருந்து, காட்டிலும் மேட்டிலும் நடந்து வந்த இந்திய அகதிகள், பல்லாயிரவர் வழியில் மடிந்தார்கள்; சிலரே இந்தியா வந்து சேர்ந்தனர்.

போர் நெருங்க, நெருங்க, இந்தியப் போர் முயற்சிகள் சூடு பிடித்தன.

நாள்தோறும் சொற்பொழிவு

கொள்கை விளக்கக் கூட்டங்கள் ஆங்காங்கே நடந்தன: பட்டாளத்திற்கு ஆள் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நன்கொடை திரட்டுவது போதாது என்று பாதுகாப்புப் பத்திரங்கள் விற்பனையால், பாதுகாப்பு நிதி திரட்டும் முயற்சி, முடுக்கிவிடப்பட்டது.

சராசரி, நாளைக்கு ஒரு கூட்டத்திலாவது நான் பேச வேண்டியிருந்தது.

தெலுங்கு பேசத் தெரியாத நான், ஆங்கிலத்தில் பேசினேன். பெரும்பாலும், பள்ளி ஆய்வாளர், அதைத் தெலுங்கில் மொழி பெயர்ப்பார்.

நீண்ட சொற்றொடர்களாக அமைந்தால், மொழி பெயர்ப்பாளர், இடர்ப்படக்கூடும் என்பது விளங்கிற்று. எனவே, சிறு சிறு தொடர்களாகப் பேசும் முறையினை மேற்கொண்டேன்.

அதுவே, என்னுடைய பேச்சு, எழுத்துப் பாணியாக நிலைத்து விட்டதோ என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

படிப்பில் மிகப் பின்தங்கிய அப் பகுதியில், பட்டாளத்தில் சேர முன்வருவோர் சிலராக இருந்தனர்.

நிதி திரட்டுவதில் ஆசிரியப் படை உதவிற்று; திங்கள் தோறும் தவறாது, குறிப்பிட்ட தொகையைச் சேமித்து உதவிற்று: ஊரார் சேமிக்கவும் உதவிற்று. எப்படி?

பாதுகாப்பு நிதி திரட்டினேன்

நான் கோகுளத்தில் சேர்ந்த சில திங்களில், அரசு ஆணை ஒன்று வந்தது. அது என்ன?

கெஜட் பதிவு பெற்ற அலுவர்கள் அனைவரும் பாதுகாப்பு நிதி சேர்க்க வேண்டும் என்பது அந்த ஆணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/81&oldid=623453" இலிருந்து மீள்விக்கப்பட்டது