பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 == ിങ്ങഖ அலைகள் அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் எல்லா நிலைக்கல்விக்கும் பொறுப்பானவன் என்ற செய்தி கேட்டு நான் செருக்கு அடையவில்லை; நிலை கலங்கவுமில்லை. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலைே செய்தற் கரிய செயல்' - இந்தத் திருக்குறள் நினைவுக்கு வந்தது; வழிகாட்டியது. எத்தகைய அரியதைச் செய்யலாம்? எல்லார்க்கும் கல்வி கிடைக்கச் செய்யும் வாய்ப்புப் பெருக்கத்தில் முயல்வோமா? = ஒளிவிடும் மாணவ மணிகள் சிலரை உருவாக்க உழைப்போமா? இரண்டையும் இணைத்து, எல்லோரும் கற்க பல்லோர், இமயமலையென உயர்ந்து நிற்க உதவுவோமா? இம்மாற்றுத் திட்டங்கள்'என் அறிவில் முளைத்தன. அன்பர்கள் பலர் என்னோடு போட்டியிட்டார்கள். அதிகாலையிலேயே தங்கள் அன்பையும் வாழ்த்துதலையும் பொழிய, என் வீடு தேடி வந்துவிட்டார்கள். அவர்களின் தோழமையை ஏற்றுக் கொண்டிருக்கையில் என் காரோட்டி நான் சொல்லி வைத்தபடி பெரிய ரோஜா மாலைகளை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தார். என்னைப் பார்த்தார். வாழ்த்த வந்த நண்பர்களிடம் நயமாக விடைபெற்றுக் கொண்டேன். காரேறி விரைந்தேன். . == தியாகராயநகர் நோக்கிச் சென்றேன்; திருமலைப் பிள்ளை சால்ைக்குள் பாய்ந்தேன். முதலமைச்சர் காமராசர் இல்லத்தை அடைந்தேன். - i - மாடியில் அலுவல் பார்த்துக்கொண்டு இருந்த முதலமைச் சருக்கு நான் வந்திருக்கும் தகவல் எட்டிற்று. - - இரண்டு மணித்துளிகளில், அவர் கீழே வந்தார்; வரவேற்பு அறைக்குள் நுழைந்தார். அங்கு அமர்ந்திருந்த நான் சட்டென எழுந்தேன். பெரிய மலர் மாலையை முதல்வருக்குச் சூட்டினேன். ஒரு வினாடியில் மாலையைக் கழற்றியபடியே இருக்கையில் அமர்ந்த முதலமைச்சர் காமராசர், என்னையும் உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்ததும் அதிக மகிழ்ச்சி என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/42&oldid=788220" இலிருந்து மீள்விக்கப்பட்டது