பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முவா கயாசருக்கு மாலை சூட்டினேன் 3. "அப்ப நான் தங்களோடு முந்திய தொடர்பு இல்லாதவன். |பதி இாண்டு வயது நிரம்பிய இளைஞன். இவ்வளவு முளையவன் இதுவரை இப்பதவிக்கு வந்ததில்லை. "தாங்கள் துணிந்து என்னை இப்பெரிய நிலைக்கு உயர்த்தி விட்சர்கள் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பணிபுரிந்து, தங்களுக்கு நற்பெயர் தேடித் தர முயல்வேன். "எப்படிப்பட்ட கெட்ட பெயரும் வராதபடி நடந்து என்று தழுதழுத்த குரலில் வாக்குறுதி தந்தேன். "நாற்பத்திரண்டு வயது என்றால், நீங்களும் நானும் பல்லாண்டு சேர்ந்து செயல்படுவோம் என்றுபொருள். "ஆசிரியர் நிலை முன்னேறினால்தான் கல்வி நிலை உயரும். ஆசிரியர்களுடைய ஊதியம் கட்டை "இப்போது பெரும்பாலானவர்களுக்கு ஒய்வு ஊதியம் கிடையாது. "ni uiygurr ஆசிரியர்களுக்கும் பென்சன் கொடுக்க வேண்டும். "இருக்கிற வசதிகளைக் குறைக்காது, கூடுதலாகப் பென்சன் கொடுக்க, ஒரு திட்டம் கொடுங்கள். -- -- "அப்படித் தீட்டுகிற திட்டம் இரகசியமாக இருக்கட்டும். "அதுபற்றிய புள்ளி விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரி பாரி துவிட்டுக் கொடுங்கள். o 'அரசுச் செயலகத்தில் இருப்பவர்கள், சிறு புள்ளி விவரத் தவறு இருந்தாலும் அதைச் சாக்காகக் காட்டி, திட்டத்தைக் கைவிட வாதிடுவார்கள். "இந்த நாட்டில் பிறந்த எல்லோரும் அநேகமாக இங்கேயே முருக்கப் போகிறோம். இன்றைக்குச் சொல்லிக் கொடுக்கிறதைக் கொண்டு முப்பது ஆண்டுகள் பிழைக்கனும் 'காலம், விரைவாக மாறியபடியே உள்ளது. வருங்காலத்தைச் சமாளிக்க, எட்டாவது படிப்பு வரை படித்தால் போதாது. எஸ்லோரும் பத்தாவது படிப்பு வரையிலாவது படிக்கணும். 'அதற்குச் சாதி பாராமல், வருவாய் கேட்காமல், எல்லா மாணவ மாணவியருக்கும் பள்ளியிறுதி வரை இலவசக் கல்வி கொடு...த் திட்டம் தீட்டுங்கள். -- --- -

"இதை ஒரே மூச்சில் நிறைவேற்றி விடுவதற்கு முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/43&oldid=788231" இலிருந்து மீள்விக்கப்பட்டது