பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நினைவு அலைகள் “மூன்று நான்கு அடியெடுத்து வைத்து நிறைவேற்றுகிற வகையில் உங்கள் திட்டம் இருக்கட்டும். “எல்லோர்க்கும் பத்தாவதுவரை இலவசக்கல்வி என்று ஆணையிடுவது மட்டும் போதாது. "எல்லோரும் வந்தால், சேர்த்துப் படிக்க வைக்கப் பேர்திய பள்ளிகள் வேண்டும். இப்போது உள்ள பள்ளிகள் போதாது. “தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிவரை எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக வேண்டும். o “தொடக்கப் படிப்பிற்கு எந்தக் குழந்தையும் ஒரு மைலுக்கு மேல் நடக்க நேரிடக்கூடாது. "இதை மனத்தில் வைத் துக் கொண்டு பள்ளிக் கூடங்களைத் தாராளமாகத் திறக்கச் செய்யுங்கள். "நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையில் உள்ள தொலைவு மூன்று மைலுக்கு மேற்படக்கூடாது. “உயர்நிலைப் பள்ளிகளின் இடைவெளி அய்ந்து மைலுக்கு மேல் போகக்கூடாது. = "இவற்றை நினைத்து, பள்ளிகளைக் கொடுங்கள். நிதி கிடைக்குமா என்ற கவலை உங்களுக்கு வேண்டாம்” என்று மளமளவென்று வருங்காலத்திற்கான வழிமுறைகளைக் காட்டி விட்டே முடித்தார் முதலமைச்சர். - i. முதலமைச்சரின் அறிவுரை முடிந்ததும், "அய்யா, தாங்கள் சொன்னபடியே, உடனடியாகத் திட்டங்களைப் போட்டுத் தருகிறேன்” என்றேன். “புள்ளி விவரங்களைச் சரி. பார்ப்பதில் கவனமாயிருங்கள். திட்டம் தீட்டியானதும் என்னிடம் வந்து சொல்லுங்கள். அதுவரை இரகசியமாகவே இருக்கட்டும்” என்று கூறி வழியனுப்பினார். தொலைநோக்குடைய நல்லவர் ஒருவரோடு உரையாடிய நிறையுணர்வோடு, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களைக் காணச் சென்றேன். = போகும் வழியில், முதலமைச்சரோடு உரையாடியதை எண்ணினேன். o m "அரசியல்வாதிகளில் ஒரு சிலர் எதிர்பார்ப்பதுபோல், ", 11 I roi i ri arri, ஆறு திங்களிலோ, ஒராண்டிலோ முதலமைச்சர் பதவியை உதறிவிடமாட்டார்” என்று என் ஆழ்மனம் கூறிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/44&oldid=788242" இலிருந்து மீள்விக்கப்பட்டது