பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

நேற்றைய செய்தி, இன்றைய வரலாறு! இன்றைய செய்தி, நாளைய வரலாறு! ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்பது, இன்னொருவரின் வாழ்க்கையை முன்னேற்ற உதவும். ஆகவே, அடுத்தவரின் வரலாற்றைப் படித்தறிதல் பயனுடையது. ‘வாழ்க்கை வரலாறுகள்’ என்பவை நல்ல வழிகாட்டிகள் சுயமுன்னேற்றத்தை விரும்புவோர் வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தேடிக் கற்க வேண்டும். வெளிப்படையான, பங்கேற்பு ரீதியான, நிர்வாகத்தை நிலை நிறுத்த வழிகாட்டும் கருத்துகள் அவ் வரலாற்று நூல்களில் மிகுதியாகக் கிடைக்கும். நிர்வாகத்தில் பெறவேண்டிய இன்றியமையாத குறிப்புகளை, ஒளிவுமறைவு அற்ற வெளிப்படைத் தன்மைகளை, அனுபவங்களைப் பொறுப்புடன் வழங்கும் தகவல் சாதனங்களாக, ஆவணங்களாக அவ் வரலாற்று நூல்கள் விளங்குகின்றன. ஏட்டுப் படிப்பில் கிடைக்கும் பட்டம் மட்டுமே ஒருவனைத் திறமையான மனிதனாக்கிவிடாது! செய்முறைகளை மட்டும் தெரிந்துகொண்டு வடை சுடுவதற்கும், அனுபவம் பெற்றவர்களின் துணையுடன் வடை சுடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு எப்போதும் முதல் முயற்சி சிக்கலானதாகவோ, சிரமமானதாகவோ இருக்கும். ஆனால், பிறருடைய முயற்சியை அறிந்து கொண்டால் அவற்றை மெருகூட்டி தம் முயற்சியை மேன்மைப்படுத்துவது எளிது!

'அம்பானி’ என்பவரைத் தெரியுமா? ஆறு ரூபாயோடு வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் பதினைந்து ஆண்டுகளில் அறுபதினாயிரம் கோடி சொத்து சேர்த்த ரிலையன்ஸ் கம்பெனியின் முதலாளிதான் அவர்!

பெருந்தகையாளர் பில் கேட்ஸ் யார்? உலகப் பணக்காரர் களுள் முதல் நிலைக்கு உயர்ந்து நிற்பவர்! பின்னர்? மைக்ரோ சாஃப்ட் வேர் கம்பெனித் தொழிலதிபர்! அடுத்து? சாதனையாளர்! சாதாரண சாதனையாளரா? காமன் வெல்த் நாடுகளில் ஏழ்மை நிலையில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஏராளமான பொருளுதவி செய்தவர் உலகையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/5&oldid=480518" இலிருந்து மீள்விக்கப்பட்டது