பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நினைவு அலைகள் உரையாடலின் தொடக்கத்திலேயே என் நியமனம் பற்றிய பேச்சு வந்தது. நான் இராஜாஜியிடம் சென்று வாழ்த்துப் பெறவில்லை. இருப்பினும் இந் நியமனம் பற்றி, மகிழ்வதாக ராஜாஜி அவர்களிடம் தெரிவித்தார். "அவர் ஆர்வமும் நேர்மையும் மிகுந்தவர். நெ. து. சுவின் நிர்வாகத்தில் தலையிடாமல் அவரைத் தன்னிச்சையாக, இயங்கவிட்டால், அவர் அருமையாகப் பணிபுரிவார்” என்று தமது கருத்தைத் தெரிவித்தார். இதைக் கேட்ட இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. - முத்ல்வர் சுவாமிநாதன், பேராசிரியர் மீனாட்சிசுந்தரத்தை என்னிடம் அனுப்பி, ராஜாஜி அவர்களின் பாராட்டுச் செய்தியை நேரில் தெரிவிக்கும்படி செய்தார். இரு தலைவர்கள் - காமராசர், ராஜாஜி என்னிடம் பெரும் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்ட நான், அவர்கள் எதிர்பார்த்த உயர்ந்த தரத்திற்குப் பணிபுரிய முயன்றேன்; அதில் வெற்றியும் பெற்றேன். - சமுதாயத்தின் பெரியவர்கள் இப்படிப்பட்ட நேரங்களில், வலியவந்து காட்டும் உன்னதமான நெறிகள், தோன்றாத் துணையாகும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு சிறப்பு இருக்கும்; சில குறைகளும் இருக்கலாம். o . . " சிறப்பை நாலுபேர் அறியப் பெரிதுபடுத்தினால், உரியவர் அதை மேலும் வளர்த்துக் கொள்ளுவார்; அதனால் குறைகள் செயல்படாமலேயே அவற்றினுடைய வலிமை இழக்கும். என்னிடம் உள்ள சிறப்பை, உரிய நேரத்தில் பிறர் அறியச் சொல்லி, ஊக்குவித்த ராஜாஜியை நினைக்குந்தோறும் நெஞ்சம் நெகிழ்கிறது. s தந்தை பெரியார் பூரித்தார் தந்தை பெரியார் என் நியமனத்தை வரவேற்றுப் பாராட்டினார். பொது மேடைகளில் அதை அடிக்கடி குறிப்பிட்டுப் பூரிப்படைந்து வந்தார். அதனால் சில வட்டாரங்களில் எரிச்சல் உண்டாகியது. ஆயினும் அவர் தொடர்ந்து பேசியே வந்தார். ராஜாஜி நேரில் பாராட் டின்ார் சில வாரங்களுக்குப் பிறகு, ஆய்வாளர் ஒருவர் வீட்டுத் திருமணம் ஒன்று, சென்னையில் நடைபெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/52&oldid=788330" இலிருந்து மீள்விக்கப்பட்டது