பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நினைவு அலைகள் எந்நிலை மேம்பாட்டை வலியுறுத்தலாம்? திட் பயிடும் வளர்ச்சிக்கு எவை எவை தேவை? அவற்றைப் பெற எந்த முறையில் நடவடிக்கை எடுப்பது? இத்தகைய கேள்விகளை எழுப்பி, ஒவ்வோர் இயக்குநரின் விரிவான கருத்துகளைத் தெரிந்துகொண்டார்கள். அந்தக் காலகட்டத்தில், திட்டமிடுதல் நமக்குப் பழக்கம் இல்லாதது; கல்வி இயக்குநர்களுக்கு, அது கண்ணைக் கட்டி . காட்டில் விட்ட நிலை. + - ஏன்? கல்வியைப் பொறுத்தமட்டில், முதல் அய்ந்தாண்டுத் திட்டம் பெயரளவில் நின்றுவிட்டதால்! எனவே, ஒரே அய்ந்தாண்டு காலத்தில், இருநூறு ஆண்டு குறைகளைத் துடைத்து விடக்கூடும்’ என்பதுபோல், பலர் உற்சாகத்துடன் பேசியது அவர்களது குறை அல்ல. கோதண்டராமனின் தெளிவுரை மண்ணுலகைவிட்டு, விண்ணுலகிற்குப் போவதுபோல் சிலர் பேசிய பிறகு, கல்வித்துறையோடு தொடர்புடைய - ஆனால் வேறு துறையைச் சேர்ந்த ஒருவர் பேசினார். அவர் திட்டக் குழுவின் இணைச் செயலர்களில் ஒருவர்; தில்லி அலுவலகங்களில் முற்றி முற்றிப் பழுத்த பழம்! அவர் கருத்து என்ன? “எத்தனையோ தலைமுறைகளாக, எத்தனையோ காரியங்களைச் செய்யாமல் விட்டுவிட்டோம். அவற்றைச் சரி செய்ய, அத்தனை தலைமுறைகள் எடுத்துக் கொள்வோம் என்றால், நாடு பொறுத்துக் கொண்டிராது. - - "அதே நேரத்தில், ஒரே தாவலில், அவ்வளவையும் தாண்ட முயல்வது, நம் நிதி நிலைக்கு அப்பாற்பட்டது. இரண்டிற்கும் நடுவில் ஒரு நல்ல வழி காணவேண்டும். “திட்டக்குழுவும், நிதி அமைச்சகமும் அடுத்த அய்ந்தாண்டு திட்டத்தில், எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு பணம் ஒதுக்குவதென்று இன்னும் திட்டமான முடிவுக்கு வரவில்லை. “கல்விக்கு ஒதுக்கீடு 250 கோடியா, முந்நூறு கோடியா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். s --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/68&oldid=788506" இலிருந்து மீள்விக்கப்பட்டது