பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவு அலைப ஆசிரியர்களையும் கல்வி அலுவலர்களையும் தமது ஜீப்1. ஏற்றிக்கொண்டு, பள்ளி இல்லாத ஊர்களைத் தேடித் தேடி சென்றார். தடமில்லாப் புஞ்சைக் காடுகளின் ஊடே பயணம் செய்தார் மற்றோர் ஜீப்பில் கரும்பலகைகள், மேசை நாற்காலிகள் பதிவேடுகள் ஆகியவை வந்தன. சென்ற ஊர்ப் பெரியவர்களைப் பிடித்து, ஏதாவதொரு கட்டடத்தை வாடகை இன்றிப் பெற்று, ஆங்கே பள்ளியைத் தொடங்கி வைத்தார். ஊரார் மாவட்ட ஆட்சிக் குழு அலுவலகத்திற்குப் பலமுறை நடையாக நடந்து அலுப்பதற்குப் பதில், ஆட்சிக் குழுத் தலைவரே ஊர்களைத் தேடிச் சென்று பள்ளிகளைத் தொடங்கியதால், கல்வித்துறை இயங்குதல் பணி எளிதாக இருந்தது; அலுவலகக் கோப்புகள் தடிப்பதும், காலதாமதம் ஏற்படுவதும் நீக்கப்பட்டன. இவருக்கு முன்பிருந்த ஆதிமூலம் அவர்களின் ஒத்துழைப்பும் எனக்குத் தாராளமாகக் கிடைத்தது. திரு. இராமசுப்பு வேறுவகை கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய அருந்தொண்டினை மீண்டும் குறிப்பேன். சா. இராமசாமி நாயுடு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழுத் தலைவராக விளங்கிய, இப்போது நம்மோடு இல்லாத திரு.சர்.இராமசாமி நாயுடுவும் எல்லா ஊர்களுக்கும் பள்ளிகளை எற்படுத்துவதில், இராமசுப்புவைப் போன்றே ஆர்வம் காட்டினார்; வெற்றியும் பெற்றார். - திரு. இராமசாமி நாயுடு, இளமை தொட்டே, காங்கிரசு இயக்கத்தைச் சேர்ந்தவர்; அந்த நாள்களில் காங்கிரசை வளர்க்கப் பயன்பட்டவர் எம். ஏ. பி. எல் பட்டங்களைப் பெற்றவர். சென்னை சட்ட மன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பணிபுரிந்தவர் தமிழ்ப் புலமை மிக்கவர். இவரது பிற கல்வித் தொண்டையும் பிற இடங்களில் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/90&oldid=788700" இலிருந்து மீள்விக்கப்பட்டது