பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டித நேருவின் கவலை 51 சாமிக்கண்ணுப் படையாச்சி தென்னார்க்காடு மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவராகிய திரு. சயி கண்ணுப் படையாச்சியும் கல்வி வாய்ப்புகளைப் பெருமளவு அார்க்கத் துணை நின்றார். சேலம் மாவட்டத்தில் திரு. கே. எல். சுப்பிரமணிய கவுண்டர், திரு.செங்கோடு திரு. காளியண்ணன் கொடுத்த ஒத்துழைப்பும் நினைவிற்கு வருகிறது. கோயம்புத்துர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவர், பழைய கோட்டை பட்டக்காரர் திரு. சர்க்கரை ான்றாடியார்,துணைத்தலைவர் திரு.டி.எஸ். திப்பையா ஆகியோர் கொடுத்த ஆதரவை மிக்க நன்றியோடு நினைவு கூர்கிறேன். மகராஜர் காமராஜர் "மகராஜர் காமராஜ் வந்தார்; பள்ளிக்கூடம் வந்தது’ என்று பார் முழுமனத்துடன் போற்றினர். புகழ்ச்சாரலில் குளிர்ந்தேன் புகழுக்குரிய ஒருவரிடம் வேலை பார்த்த எனக்கும் புகழ்ச்சாரல் வீழ்ந்து என்னைக் குளிர்வித்தது. எனவே, அழைப்புகள் அளவில் அடங்கவில்லை என்னைப் பார்க்க வந்தோர் ஏராளமானோர். எவருக்கும் பொறுப்பு சொல்லத் தேவையில்லாத இன்றைய நிலையிலும் காலைச் சிற்றுண்டியை உண்பதற்கு முன்பே, எவராகிலும் என்னைத் தேடி வந்தால், வந்தவர்களைக் காக்க வைக்காமல், பார்த்து அனுப்பிவிட்டுப் பின்னரே, அகாலத்தில் உணவு உண்ணும் போக்குடைய நான், அன்று வந்தவர்களைப் பார்ப்பதற்கு மட்டுமே இருப்பதுபோல் நடந்து கொண்டேன். வீட்டிலோ, அலுவலகத்திலோ, வந்த எவரையும் நிறுத்தி வைத்தது இல்லை. வேறொருநாள் வரச்சொன்னதுமில்லை. மக்கள் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாக மட்டும் அல்லாது ஆட்சியின் குறிக்கோளாகவும் இருந்ததால், வேண்டுகோள்களைத் தகுதி அடிப்படையில் தயங்காது நானே முடிவு செய்ய முடிந்தது. மாகாணத் தலைவர், அலுவலர், பார்வையாளர்களின் வேண்டுகோள்களைக் கவனிப்பதோடு, ஏராளமான கோப்புகளைப் பார்த்து ஆணையிட வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/91&oldid=788701" இலிருந்து மீள்விக்கப்பட்டது