பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 45 5. உனக்குத் துணை நீதான் 'நாம் முன்னேற வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நாம்தான் உழைக்க வேண்டும். பிறரை நம்பி இருப்பது பேதமை. பிறரின் முழு உதவியையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பிறரால்தான் நாம் முன்னேற முடியும் என்று நம்புவது மிகவும் அறிவில்லாத்தனம்.' இப்படி நான் எழுதுவதால், பிறர் உதவியை நாம் கேட்கவே கூடாதா என்றால், தேவைதான். ஆனால், மற்றவர்களே வந்து நமக்கு உதவுவார்கள் என்று மனதுக்குள் நம்பி, செயலில்லாமல் ஓய்ந்து கிடப்பதுதான் முட்டாள்தனம் என்கிறேன். ஒருவர் முன்னேற வேண்டும், முன்னேற முடியும் என்றால், அதற்கு அடிப்படையாக, அஸ்திவாரமான ஒன்று உண்டு. அதற்குப் பெயர் தான் உழைப்பு. வெறும் உழைப்பு என்பது, விழலுக்கு இறைத்த நீராகும். அதாவது உழைப்பு வீணாகிப்போய் விடும். குறிபார்த்து எறியாத கல், என்ன பயனைக்கொடுக்கும்? விரும்பிய கனியை வீழ்த்துமா என்ன? அதுபோல, இலட்சியம் என்பது ஒன்று வேண்டும். இலட்சியம் என்பது என்ன? நம்மால் ஒரு இடத்தை, தகுதியை, காரியத்தை அடைந்துவிடமுடியும் என்று நாமே ஏற்படுத்திக் கொள்கின்ற நீங்காத நினைப் பு: இரவிலும் பகலிலும், கனவிலும் நினைவிலும் நீங்காமல் இருக்கின்ற வாய்ப்பு. சுகமான நினைப்பு, ரசிப்பு.