பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 61 "மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்.' என்று ஒரு பாடல் உண்டு. காரியத்திலே கண்ணாய் இருப்பவர்கள், உடல் நோவினை பொருட்படுத்தமாட்டார்கள். பசியைபுறம் தள்ளிவிடுவார்கள். உறக்கத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள். - பிறர் செய்கின்ற தீமைகளைச் கூட பெரிது பண்ணமாட்டார்கள். இப் படி சில வித்தியாசமான குணாதிசயங்களுடன் வாழ்பவர்களே, வாழ்க்கையின் மேன்மை நிலையை அடைகின்றார்கள். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவரை 8.1.8 என்று சிலர் கேலி செய்வார்கள். சூட்சமமாக 8.1.8 என்றால், எல்லோருக்கும் அவர் பெயர் தெரியும். அவரது கொள்கையும் வாழ்க்கை முறையும் வித்தியாசமாகவே இருந்ததும் ஒரு காரணம். காலை 8 மணி வந்தால் டி.பன்; 1 மணி அடித்தால் சாப்பாடு, இரவு 8 மணி என்றால் மீண்டும் சாப்பாடு. இந்த நேரம்தாண்டிவிட்டால் வீட்டிலே ஒரே ரகளை தகராறு, அடிதடி, மனைவியிடம் குடுமிபிடிசண்டை, பயங்கரமான சத்தம். - நல்ல வசதியுள்ள மனிதர்தான். வயிற்றுப் பிரச்சினையை அவர் வாழ்வுப் பிரச்சினையாக்கிவிட்டார். தினம் தினம் தகராறுதான். அவரது மனமோ குறைகளையே கண்டுபிடிக்கத் தொடங்கியதால், வாழ்வும் குதர்க்கமாகப் போய்விட்டது.