பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 65 கொண்டே இருக்கின்றன. இதழ்கள் எல்லாம் உதிர்ந்து போனாலும் ரோஜாப்பூ என்றுதான் சொல் கிறோம். அதற்கு வேறு பெயர் கிடையாது. தழைத்து செழித்த ஒருமரம் இருக்கிறது. அதிலுள்ள இலைகள், கிளைகள் ஒடிந்து விழுந்தாலும் அதை மரம் என்று சொல்கிறோம். முழுதுமாக விழுந்து விட்டால் பட்டமரம் அல்லது கட்டை மரம் என்கிறோம். அதற்கு வேறு பேர் கிடையாது. ஆனால் மனித உடலிலிருந்து ஓர் உறுப்புக் குறையட்டுமே அல்லது இழக்கட்டுமே. அந்த உடம்பிற்கு என்ன பெயர் தெரியுமா? - தலைமுடி உதிர்ந்தால் 'சொட்டை என்கிறார்கள். கண் போனால் 'குருடு', காது கேட்காவிட்டால் 'செவிடு’, வாய் பேசாவிட்டால் "ஊமை”, கை, கால் குறைந்தால் 'முடம் உயிர்போனால் 'சவம்'. இதற்கு மேலே ஒரு நோய் வந்தாலும் அந்தப்பேரை வைத்தே நோயாளியை அழைப்பார்கள். அவன் செய்கிற தொழிலை வைத்து வேறு புதிய பெயரிட்டு அழைப்பார்கள். ஆக, எந்த நிலையிலும் மனிதன் பெயர் மாறாமல், மனிதனாகவே இருக்கவேண்டுமென்றால் அவன் முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டும். இப்படி உறுப்புக்கள் குறைப்பாட்டிற்கு ஏற்ப, ஒவ்வொரு பெயரை வைத்து இந்த உலகமக்கள் மற்றவர்களை அழைக்கத் தவறு வதில்லை. அவமானப் படுத்தி மகிழ்வதிலும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டுவதில்லை.