பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 73 தொடர்கின்றன. வேகமாக நடந்து வந்த விவேகானந்தர் இனிமேல் பயப்படக் கூடாது என்று எண்ணித் திடீர் என்று நிற்கிறார். அவரது கோபப் பார்வையைக் கண்ட குரங்குகள் அப்படியே நின்று விடுகின்றன. அவரது பார்வைக்குப் பயந்து பின்வாங்கி ஓடுகின்றன. அன்று முதல் அவரது வீரம் மதிக்கப்பட்டு, 'வீரத் துறவி என்ற புகழையும் வாங்கித்தந்தது. இதைத்தான் நாம் "துணிந்து நில்” என்கிறோம். இந்தியாவைப் பதினெட்டுமுறை கொள்ளையடித்த கஜினி முகம்மது மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவனைச் சுற்றிச் சொந்தக்காரர்கள், மந்திரிகள், சேனாதிபதிகள் எல்லோரும் இருக்கிறார்கள். அவரது ஆணையின்படி அவர் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் அவர்கள் முன்னே வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றைப் பார்க்கிறான். அணிமணிகள், அலங்கார நகைகள், பிரமிக்கும்படியான விந்தை ஆபரணங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறான். குமுறிக் குமுறி அழுகிறான். சுற்றி நிற்கின்ற எல்லோரையும் பார்க்கிறான். தேம்பித் தேம்பி அழுகிறான். கடைசியிலே கண்ணிர் மல்க ஒரு வாக்கியத்தைப் பேசுகிறான். 'கடவுளே! எனது எல்லாச் சொத்துக்களையும் என்னோடு கொண்டுபோக அனுமதித்தால் எடுத்துக் கொண்டு போவேனே. அது என்னாலும் முடியாது. உங்களாலும் முடியாது - என்று கூவி அழுதான். இது ஞானம். இப்படிப்பட்ட ஞானந்தான் ஒருவனைத் துணிவு உடையவனாக மாற்றுகிறது.