பக்கம்:நிலாப்பாட்டி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பாட்டி, என்னைக் காப்பாற்று" என்று சொல்வது போலக் குருவி பார்த்தது. அதன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.

நிலாப்பாட்டி, "ஐயோ பாவம் ! யாரோ இதன்மேல் கல்லை எறிந்திருக்கிறார்கள் போலிருக்கிறது" என்று கூறிக்கொண்டு, சில பச்சிலைகளைப் பறித்து வந்தாள். அவற்றிலிருந்து சாற்றைப் பிழிந்து, காயத்தின் மீது ஊற்றிக் கட்டினாள். ஒடிந்திருந்த காலையும் நேராக வைத்து, அதற்கு ஒரு கட்டுப் போட்டாள்.

பிறகு, அந்தக் குருவியைக் குடிசைக்குள் கொண்டுபோய். முதலில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வைத்தாள். சட்டியிலிருந்து கம்பஞ்சாதம் சிறிது எடுத்து வந்து அதற்குக் கொடுத்தாள். அதைச் சாப்பிட்டுவிட்டுக் குருவி அடிபட்ட மயக்கத்தால் அப்படியே படுத்துத் தூங்கி விட்டது.

நிலாப்பாட்டி அந்தக் குருவியைத் தன் குழந்தையைப் போலக் கவனித்து வந்தாள். சில நாட்களிலே அதற்குக் காயமெல்லாம் ஆறிப் போயிற்று; ஒடிந்த காலும் சரியாகிவிட்டது. இப்பொழுது அதனால் பறந்துபோகவும் முடிந்தது. வெளியில் போய்த் தனக்கு வேண்டிய இரையைத் தானே தேடிக்கொண்டது. ஆனால், அதற்குக் கிழவியைவிட்டுப் பிரிந்து வாழ மனம் வரவில்லை. அவளுடனேயே குடிசையில் வாழ்ந்து வந்தது.

குருவி காலையில் எழுந்து இனிமையாகப் பாடும். அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே மகிழ்ச்சியோடு கிழவி எழுந்திருப்பாள்.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/10&oldid=1117024" இலிருந்து மீள்விக்கப்பட்டது