பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அறிவிப்பு செய்து, அத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பகுத்தறிவுப் போட்டி போன்ற பல விதமான பரிசுப் போட்டிகளைப் புகுத்தினார். பல நகரங்களில் சில வாரங்கள் விகடன் இதழ்களை இலவசமாக விநியோகிக்கச் செய்தார். இதன் மூலம் வாசகர்களிடம் ஒரு ருசியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார். இவற்றுடன், ஆசிரியர் பொறுப்பு வகித்த கல்கி ரா. கிருஷ்ன மூர்த்தியின் எழுத்தாற்றல், கதை சொல்லும் திறமை, நகைச் சுவை, எந்த விஷயத்தையும் வாசகர்களுக்கு எளிதில் புரியும்படி எழுதுதல் போன்ற தன்மைகளாலும் விகடனின் வாசகப் பரப்பு அதிகரித்தது. சிறுகதைக்கு வரவேற்பும் செல்வாக்கும் கூடி வந்த காலம் அத்து. எல்லாப் பத்திரிகைகளும் சிறுகதைகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டின. சிறுகதைக்கு என்றே மணிக்கொடி பத்திரிகை நடந்து கொண்டிருந்தது. அது சிறுகதையில் புதுமைகள் செய்தது. ஆனந்த விகடனும் பலரகமான சிறுகதைகளையும் வெளியிட்டது. முதன்முதலாக சிறுகதைக்கென விகடன் ஒரு போட்டி நடத்தியது. அதில் தேர்வு செய்யப்பட்ட மூன்று கதைகளுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. பிறகு, கவி பாரதி நினைவாக ஒரு சிறுகதைப் போட்டி வைத்தது. தொடர்கதையாக வெளியிடுவதற்கு ஏற்ற நாவல்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நாவல் போட்டி ஒன்றையும் விகடன் நடத்தியது. இவ்வாறு எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தது ஆனந்தவிகடன்: கல்கி எழுதிய குறுநாவல் பாணியிலான, நீண்ட சிறுகதைகள் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. பவானி பி.ஏ, பி.எல், மயிலைக்காளை, திருவழுந்துர் சிவக்கொழுந்து போன்ற கல்கியின் சுவாரசியமான சிறுகதைகள் 1930களில் விகடனில் பிரசுரம் பெற்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் விகடன் குறிப்பிடத்தக்க அளவு பணிபுரிந்தது அக் காலகட்டத்தில் பியூரீ ஆச்சார்யா, கம்பராமாயணக் காட்சிகளை கம்பசித்திரங்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவந்தார். அவற்றுக்கு ஓவியர் சேகர் வரைந்த தனித்தன்மை வாய்ந்த படங்கள் அழகு செய்தன. சாதாரண வாசகர்களுக்கும் கம்ப ராமாயணத்தில் ஒரு ஈடுபாடு ஏற்படச் செய்தன. அக் கட்டுரைகள். பி. பூரீ யின் கம்பராமாயணக் கட்டுரைகளுக்கு இருந்த வரவேற்பை யும் பேராதரவையும் உணர்ந்த நிர்வாகத்தினர் தொடர்ந்து பியூரீயை எழுதும்படி செய்தனர். கம்பசித்திரங்கள் நிறைவுற்ற பின்னர், சித்திர நிலைபெற்ற நினைவுகள் கி 167