பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1940இல் என் கதை ஒன்று ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. புன்னகையும் புது நிலவும் என்ற அந்தக் கதைக்காக பதினைந்து ரூபாய் சன்மானமும் எனக்கு வந்து சேர்ந்தது. என் எழுத்து மூலம் எனக்குக் கிடைத்த முதல் வருமானம் அது என் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அது அதிகப்படுத்தியது. புதிய புதிய புத்தகங்கள் வாங்குவதற்கு பூரீவைகுண்டத்திலேயே வசதி இருந்தது. அவ்வூரில் கதர்கடை வைத்திருந்த திருவேங்கடம் என்பவர் தினமணி விற்பனையாளராகவும் இருந்தார். மணிக்கொடி வெளியீடு களும், நவயுகப் பிரசுராலயப் புத்தகங்களும் விற்பனைக்காக அவருக்கு - புதுமைப்பித்தன் கதைகள் என்கிற 29 கதைகள் கொண்ட பெரிய புத்தகம், புதமைப்பித்தனின் ஆறு கதைகள் நாசகாரக்கும்பல், பக்த குசேலா (கரியுக மாடல்) ஆகிய சின்னச் சின்ன வெளியீடுகள் புதுமைப் பித்தன் மொழிபெயர்த்த உலகத்துச் சிறுகதைகள், சொ. விருத்தாசலம் என்ற பெயரில் அவர் எழுதிய பாசிஸ்ட் ஜடாமுனி (இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் வரலாறு), சொவியும் ந. ராமரத்னமும் இணைந்து எழுதிய கப்சிப் தர்பார் (ஹிட்லர் வரலாறு) ஆகியவை அப்போது வெளிவந்தன. மற்றும் ஆங்கில, இந்தி மொழி நாவல்களும் மொழிபெயர்ப்பு நூல்களாக வந்திருந்தன. அவற்றை எல்லாம் நான் வாங்கிப் படித்தேன். ஆனந்த விகடன் ஏஜன்ட் மூலம் வ.வெ.சு ஐயரின் சிறுகதைத் தொகுப்பான குளத்தங்கரை அரசமரம் புத்தகம் வாங்கமுடிந்தது. அந்த வருடம் தான் தேசிகவி நாயகம் பிள்ளையின் கவிதைகள் 'மலரும் மாலையும் என்ற தொகுப்பாகப் பிரசுரம் பெற்றன. கவிமணி கவிதைகளை வெளியிட்ட பதிப்பகமே டிகே சிதம்பரநாத முதலியாரின் கட்டுரைகளை இதயஒலி என்ற நூலாகப் பிரசுரித்தது. முக்கூடற் பள்ளு நூலையும் வெளியிட்டது. அந்தப் பதிப்பகத்துக்கே எழுதி நேரடியாக இம் மூன்று நூல் களையும் வரவழைத்தேன். பத்திரிகைகளும் தபாலில் வந்தன. சக்திதாசன் சுப்பிரமணியன் நவசக்தி இதழை வாரம்தோறும் எனக்கு அனுப்பிவைத்தார். பாரத சக்தி பத்திரிகையும் வந்தது. லோக சக்தி நிறுத்தப்பட்டு விட்டது. நிலைபெற்ற நினைவுகள் 3; 217