பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைக்கட்டு, அதிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் - ஊகங், அவ்வாறெல்லாம் வெளிஉலகில் அதிசயங்கள் இருந்தன என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கும்பிடுவதற்கு கோட்டைக்குள்ளேயே சிறுகோயில் இருந்தது. அவசர அவசியத்துக்கு ஏதேனும் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால், அதற்காக ஒன்றிரண்டு சிறுகடைகள் உள்ளேயே இருந்தன. இவ்விதம் அந்தக் காலத்தில் (1940இல்) அறுபது குடும்பங்கள் கோட்டைக்குள்ளிருந்த வீடுகளில் வசித்தார்கள். ஆண்கள் கண்டிப்பாக நடந்துகொண்டார்கள். கோட்டைக்கு மூன்று வாசல்கள் இருந்தன. கிழக்குவாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் என்று அவற்றில் வடக்கு வாசல் எப்பவும் அடை பட்டே கிடந்தது. திறக்க முடியாதபடி அதை அடைத்து விட்டார்கள். அதற்குக் காரணமாக ஒரு கதை நிலவியது ஊரில், வடக்குப் புறம் தோப்பும் வயல்களும் இருந்தன. ஒருசமயம், கோட்டைக்குள் வசித்த குமரி ஒருத்தி வெளி உலகத்து வாலிபன் ஒருவனை நேசித்து, அவனோடு உறவாடிக் கொண்டிருந்தாள். வடக்கு வாசல் வழியாக அவள் தோப்புக்கு வருவாள். அங்கே அவளுக்காகக் காத்திருப்பான் அவள் காதலன். இருவரும் சந்தோஷமாக நாள்களைக் கழித்தார்கள் ரகசியமாக இந்த விஷயம் பெரியவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்களில் சிலர் திட்டம் தீட்டி, பதுங்கி இருந்து ஒருநாள் இரண்டு பேரையும் 'கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டார்கள். உடனேயே அந்த இடத்திலேயே அவர்களைத் தீர்த்துக் கட்டினார்கள். வெட்டிச் சாகடித்த இரண்டு உடல்களையும் வடக்குவாசலில் ஆழக் குழி தோண்டிப் புதைத்தார்கள். அன்றிலிருந்து அந்த வாசலையும் அடைத்து, மண்பூசி மறைத்துவிட்டார்கள். பிரிட்டிஷ் அரசு, அந்தக் கோட்டைப் பராமரிப்புக்காக ஆண்டுக்கு இத்தனை ரூபாய் என்று ஒரு சிறு தொகை அளித்து வந்தது. வளங்கள் பெருகி எல்லாம் மலிவாகக் கிடைத்த காலத்தில், அந்தத் தொகை பராமரிப்புக்குப் போதுமானதாக இருந்தது. கால ஓட்டத்தில் அது பற்றவில்லை. அதனால் கோட்டைப் பராபரிப்பும் ஏனோதானோ என்று அசிரத்தை நிலையை அடைந்தது. 222 : வல்லிக்கண்ணன்