பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரி, உன் விருப்பம் போல் படித்து எழுதி முன்னேறு என்று என் அண்ணா கோமதிநாயகம் ஆதரவு தந்தார். நீ எல்லாம் எழுதி முன்னுக்கு வரமுடியாது. நீ வேலையை விட்டது தப்பு என்று ஓங்கிய குரலில் சொன்னார் ஒரு பெரியவர். ராஜவல்லி புரம்காரர். எனக்கு உறவுக்காரரும் கூட பார்த்த வேலையில் இருந்து கொண்டே மனதிருப்திக்காக எழுதலாம். ஏதாவது ஒரு வேலையில் இருந்தபடி எழுதுவதுதான் சரிப்பட்டு வரும் அரசாங்க ஆபீஸ் வேலை பிடிக்கவில்லை என்றால், சின்னதாக ஒரு கடைவைத்துக் கொண்டு பிழைக்க வழி தேடு. அதோடு உன் விருப்பம் போல் எழுது, படி, எழுத்தையும் படிப்பையுமே முழுநேர வேலையாகக் கொள்வேன் என்பது புத்திசாலித்தனமில்லை. ஏதாவது பத்திரிகை ஆபீசில் சேர்ந்து முன்னேறிவிடலாம் என்று நினைத்தால், அது வெறும் கனவு தான். நடைமுறையில் சரிப்பட்டு வராத விஷயம் அது நம்மைப் போன்றவங் களாலே சொந்தமாகப் பத்திரிகை நடத்தி உயரவும் முடியாது. அதுக்கு நிறையப் பணம் வேணும் வேறு திறமைகளும் வேணும் என்று நீண்ட நேரம் பேசினார் அவர். அப்படி எனக்கு உபதேசிப்பதற்கு அந்தப் பெரியவருக்கு உரிமையும் தகுதியும் இருந்தன. அவருக்குப் பல வருடப் பத்திரிகைத் துறை அனுபவம் இருந்தது. அவர் இலங்கை போய் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் உழைத்து முதிர்ந்திருந்தார். அங்கு அநேக வருடங்கள் பணி புரிந்து விட்டு வெறும் ஆளாக ஊர் திரும்பி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். எனக்கு நல்லது எண்ணி அவர் சொன்ன சொற்கள் எனக்கு ஏற்புடையனவாக இருக்கவில்லை. எவருடையநல்லுரையையும் கேட்டுச் செயல்புரியக் கூடிய நிலையில் நான் இருந்தேனில்லை. என் மனக்குரலுக்கே நான் செவிசாய்த்தேன். உழைத்து, என்னை தகுதிப்படுத்திக் கொண்டு எழுத்துலகில் முன்னேற வேண்டும். இதுவே என் குறிக்கோளாக இருந்தது. வளர்வேன், முன்னேறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆகவே மற்றவர்கள் பேச்சை நான் பெரிது படுத்தவில்லை. எழு, விழி, உணர், ஒளிர் இலட்சியத்தை அடைகிற வரை சோர்ந்து 235 38 வல்லிக்கண்ணன்