பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/95

இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கண்ணாடிகள் வகை வகையான கலர் கண்ணாடிகளும் உண்டு பகலில் பார்ப்பதற்கே அது தகத்தகாயமாக மிளிரும் இரவில் காந்த விளக்கு (கியாஸ் லைட்) வெளிச்சத்தில் கண்ணாடிச் சில்லுகளில் ஒளிபட்டு தகதகவென ஒளிரும் அதனாலேயே அதற்கு தகத்து என்று பெயர். அந்தத் தேரில் மாப்பிள்ளை பெண் அமர்வதற்கு வசதியான ஆசனங்கள் இருக்கும் அவற்றின் இருபுறமும் உயரமான பொம்மைகள். பெண் வடிவங்கள் கைகளில் மென்மயிரினால் அடர்த்தியாகச் செய்யப்பட்ட கவரிகள் விசிறிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். பொம்மைகள் கையை அசைத்து அசைத்து கவரி கொண்டு வீசி காற்றெழ வைப்பற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் ஊர்வலம் நெடுகிலும் பொம்மைகள் கவரி வீசிக் கொண்டிருப்பது காண்போருக்கு இனிய காட்சியாக அமையும். அவற்றின் அருகில் மெழுகுவர்த்தி விளக்குகள் தாங்கிய தீப மங்கையரும் (பொம்மைகள் தான்) கானப்படுவர். - இந்தத் தகத்தின் உரிமையாளர் திருநெல்வேலியில் வசித்த ஒரு கார்காத்தார். கார்காத்த இனத்தவர்களிடையே பழக்கமான வழக்குச் சொற்களில் ஆயான் என்பதும் ஒன்று தந்தையைக் குறிப்பது கிராமங் களில் சமீபகாலம் வரை கூட சில குடும்பத்தினர் அப்பாவை ஆயான் என்று குறிப்பிடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. பெரியப்பாவை பெரியாயான் (பெரிய ஆயான்), என்றும் சித்தப்பாவை சின்னாயான் (சின்ன ஆயான்) எனவும் சொல்வார்கள். தாய்மார்கள் பிள்ளையை கொஞ்சும் போது என்னைப் பெத்த ஆயான் என் செல்ல ஆயான் என்று அன்பாகச் சொல்வது வழக்கம் இதனால் இதர இனத்தவர், கார்காத்த இனத்தைச் சேர்ந்தவர் ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல அவர் ஆயான் என்று கூறுவதும் வழக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில், தகத்தை சொந்தமாக வைத்துக்கொண்டு, திருமணவிசேஷங்களுக்குகார்காத்தார் ஒருவர் வாடகைக்கு விட்டு வந்ததால், அது ஆயான் தகத்து என்று பெயர் பெற்றிருந்தது. அந்தத் தகத்து ராஜவல்லிபுரத்துக்கு வந்தது அதிவிசேஷமாகக் கருதப்பட்டது. மாப்பிள்ளையும் பெண்ணும் தகத்தில் அமர்ந்து ஊர்வலம் வந்தார்கள். முன்னும் பின்னும் பல கியாஸ்லைட்டுகளை ஆள்கள் சுமந்து வர, அந்தப் பேரொளியில் தகத்து அற்புதமாகப் பிரகாசித்தது. . நிலைபெற்ற நினைவுகள் 3; 95