பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நிலைபெற்ற நினைவுகள் சான்றுகளுடன் ஒரு கட்டுரை எழுதினேன். அதை எடுத்துக் கொண்டு திருச்சி வந்து விராரா, விடம் கொடுத்தேன். கட்டுரையைப் படித்துப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வருகிற காலமோகினி’ இதழிலேயே அதை வெளியிடத் தீர்மானித்தார். அத்துடன் இவர் நமது அதிதி என்று என்னைப் பற்றி எழுதி, அட்டையில் எனது படத்தை அச்சிடுவது என்றும் முடிவு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த நண்பர் மாருதி ராவை எனது சித்திரத்தை வரையும்படி செய்தார். மாருதி தான் ‘கலாமோகினி'க்கு வேண்டிய சித்திரங்களை வரையும் ஒவியராகச் செயல்பட்டார். இந்த வேலை முடிந்ததும் நான் மீண்டும் சென்னை சேர்ந்தேன். விரைவிலேயே கலாமோகினி இதழ் வந்தது. அம்பலம் பகுதியில் ‘மாரீச இலக்கியம்’ என்கிற எனது கட்டுரை பிரசுரம் பெற்றிருந்தது. அட்டையில் எனது படமும், உள்ளே இந்த மாதரி அதிதி என்று என்னைப் பற்றிய கட்டுரையும் வந்திருந்தன. "சினிமா உலகம் பத்திரிகையில், மலர்களில் வந்த கட்டுரையில் எனது ஃபோட்டோ அச்சானது உண்டு. ஆயினும் அட்டைப் படமாக எனது சித்திரம் (என்னைப் பார்த்து தஞ்சாவூர் மாருதி வரைந்தது) முதன் முதலில் வெளிவந்தது ‘கலாமோகினி' எனும் மறுமலர்ச்சி இலக்கிய இதழில் தான். இது எனக்கு அளவிலா மகிழ்ச்சி அளித்தது. அந்தக் கட்டுரை பரபரப்பு ஏற்படுத்தியது. பத்திரிகை ஆசிரியர்கள் சிலரது மனக்கசப்பையும் பெற்றுத் தந்தது. அவர்களில் 'கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் அவர்களும் ஒருவர் ஆவார். அதன் பயனாக சிறிது காலம் வரை அவர் எனது கதைகளை கலைமகள் இதழில் வெளியிடாது ஒதுக்கித் தள்ளினார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இக்கட்டுரை வந்த பிறகு, நான் கட்டாயம் கிராம ஊழியன்’ பத்திரிகையில் பணிபுரிவதற்காக துறையூர் வந்தே ஆகவேண்டும் என்று திருலோக சீதாராம் உறுதியாகத் தெரிவித்தார். பத்திரிகையின் நிர்வாகி அ.வெ.ர.கி.ரெட்டியார் சென்னை வருகிறார், அவர் உங்களை அழைக்க வருவார். அவருடன் நீங்களும் புறப்பட்டு வரவேண்டும் என்று திருலோகம் கடிதம் எழுதினார்.