பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 & நிலைபெற்ற நினைவுகள் கதைகளை வெளியிட்டது. திறமையை நிரூபித்த இலங்கை எழுத்தாளர்களுக்கும் மலரில் இடம் அளிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அங்குள்ள படைப்பாளிகளுக்குக் கடிதம் எழுதினேன். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தந்தார்கள். இலங்கையின் முன்னோடித் தமிழ்ச் சிறுக எழுத்தாளர்களான சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், இலங்கை என் மூவரும் நல்ல சிறுகதைகள் எழுதி உதவினார்கள். சோதியாகராசா, ச.அம்பிகைபாகன் போன்றவைகள் கட்டுரைகள் தந்தார்கள். இளைய தலைமுறைப் படைப்பாளிகளும் கதை, கவிதை வழங்கியிருந்தனர். அந்நாள்களில் தமிழ்ப்பத்திரிகைகள் சிறப்பு மலர்கள் தயாரிக்கும்போது, மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர், சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் முதலிய மகாப்பெரியவர்கள், மற்றும் மந்திரிகள், அரசியல் தலைவர்களுக்கு முதலிடம் தந்து அவர்களுடைய எழுத்துக்களையே முதன்மையாக, வரிசையாக வெளியிட்டு வந்தன. இதை ஒரு மரபாகவே அவை கொண்டிருந்தன. கிராம ஊழியன் மலர் அந்த மரபை மீறியது. இலங்கையைச் சேர்ந்த சாதாரண எழுத்தாளரான சோ. தியாகராசாவின் கட்டுரையை முதல் கட்டுரையாக வெளியிட்டது. இதனால் எல்லாம் இலங்கை எழுத்தாளர்கள் கிராம ஊழியனையும் என்னையும் வெகுவாக மதித்துப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இலங்கையர்கோன், கிராம ஊழியனின் இறுதி இதழ் வரை சிறுகதை, நாடகம் என்று எழுதி உதவிக் கொண்டிருந்தார். இளைய படைப்பாளிகளும் உற்சாகமாக ஆதரவு தந்தார்கள். மீண்டும் காலம் எனது வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொடுத்தது. திருலோக சீதாராம் கிராம ஊழியனை விட்டுப் பிரிந்து செல்லத் தீர்மானித்தார். அவர் திமது வாழ்க்கை முன்னேற்றத்துக்காகச் சில திட்டங்கள் தீட்டியிருந்தார். அதைச் செயல்படுத்துவதற்காகத் துறையூரை விட்டுத் திருச்சிக்கே போய் விடுவதுதான் நல்லது என்று அவர் முடிவு செய்தார்.