பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 35 நடிகர் பி.யூ.சின்னப்பா திறமையாகப் பாடவும் செய்தார்; நடிப்புத் திறமையும் காட்டினார். தியாகராஜ பாகவதரின் வசியத் தோற்றத்தை அவர் பெற்றிருக்கவில்லை. படத்துக்கு வசனமும் தனித்தன்மை சேர்க்கக் கூடும்; பாடல், நடிகர் இவற்றுடன் அழகான, உணர்வுள்ள தமிழ் வசனம் படத்தை வெற்றிகரமாக்க முடியும் என நிரூபித்தார் இளங்கோவன் (ம.க. தணிகாசலம்) என்ற எழுத்தாளர். பாடல்கள்- பாபநாசம் சிவன் நடிப்பு - எம்.கே.தியாகராஜ பாகவதர் அல்லது பி.யு. சின்னப்பா, வசனம் இளங்கோவன் என்ற கூட்டுப் படங்களுக்குப் பெருமை சேர்த்தது. சினிமா பற்றியும் நண்பர்கள் ரசமாகப் பேச்சு பரிமாறுவது வழக்கம். நானும் என் சகோதரர்களும் முக்கியமான நல்ல படங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். நான் வேலையை உதறிவிட்டு திருநெல்வேலி வந்து சேர்ந்து பத்து மாதங்கள் ஓடிவிட்டன. விரைவில் ஒரு வருடம் முடிந்துவிடும். நான் என் வளர்ச்சி குறித்து சிந்திக்கலானேன். திருநெல்வேலியிலேயே வீட்டோடு தங்கி இருந்து எழுதிக் கொண்டிருப்பது வளர்ச்சிக்குத் துணைபுரியாது என்ற எண்ணம் என்னுள் உறுத்திக் கொண்டிருந்தது. வெளியூர் சென்று ஏதாவது பத்திரிகையில் சேர்ந்து உழைத்தால் வளர்ச்சி ஏற்படலாம் என்ற நினைப்பும் எழுந்தது. எனவே எனக்கு என் எண்ணம் நிறைவேறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்த பத்திரிகை உலக நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன். "சினிமா உலகம் ஆசிரியர் பி.எஸ். செட்டியாரின் கடிதம் முதலில் வந்தது. சினிமா உலகம் பத்திரிகைக்கே ஒரு உதவி ஆசிரியர் தேவைப்படுகிறது. சிறிது காலம் பொறுத்திருங்கள் நானே உங்களை அழைத்துக் கொள்வேன்’ என்று அவர் எழுதியிருந்தார். சென்னையிலிருந்து ‘நவசக்தி ஆசிரியர் சக்திதாசன் சுப்பிரமணியம் உற்சாகமாக எழுதியிருந்தார். 'நவசக்தியே’ உங்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறாள். ஆனால் இப்போது சந்தர்ப்பங்கள் சரியில்லை. யுத்தகால நெருக்கடிகளால் சிரமங்கள் நீடிக்கின்றன. மக்கள் குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகை அலுவலகங்கள் கூட வெளியூர்களுக்கு இடம்