பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 & நிலைபெற்ற நினைவுகள் இடத்துக்கும் செட்டியார்களுக்கும் தொடர்பு அதிகம்தான் என்றும் அவர் கூறியிருந்தார். திருமகள் அலுவலகத்துக்கு ஒர் எழுத்தாளர் வருவார். வறுமை நிலையை அவரது தோற்றமே சொல்லும் நல்ல எழுத்துத் திறமை உடையவர். தனக்கென ஒரு தனிநடை கொண்டு சிந்தனைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அரா. என்ற பெயரில் எழுதுவார். புதுக்கோட்டையில் இருந்த காகித விற்பனைக் கடை ஒன்றில் அவர் வேலை பார்த்தார். அ. ராமாமிர்தம் என்பது அவர் பெயர். மறுநாள் வந்த அவர் என்ன, ராத்திரி ஆச்சி உங்களிடம் விசாரணை நடத்தினார்களாமே? என்று கேட்டார். அந்த வீட்டு வேலையாள் இவரிடம் சொல்லியிருப்பார் என்று எண்ணினேன். நடந்ததைச் சொன்னேன். 'செட்டியார் கோவலன் டைட். அவர் விவகாரங்கள் ஆச்சிக்குத் தெரியும். சொத்து பணம் எல்லாம் ஆச்சிகிட்டே தான் இருக்கு. பத்திரிகை நடத்துவதற்குக் கூட ஆச்சி பணம் தந்தால்தான் உண்டு. அதனாலேதான் 'திருமகள் மாதம்தோறும் ஒழுங்காக வரமுடியலே என்று அரா. விளக்கினார். பத்து மணிக்கு இராம மருதப்பர் வந்தார். வந்ததுமே, ராத்திரி ஆச்சி உங்களைக் கூப்பிட்டு விசாரிச்சாங்களா? என்று கேட்டார். இது போன்ற விஷயங்கள் எப்படித்தான் வேகமாகப் பரவிப் பலருக்கும் தெரிந்து விடுகிறதோ என்ற வியப்பு எனக்கு. ஆச்சிக்கு செட்டியார் பேரில் நம்பிக்கை கிடையாது. அவர் கண்டபடி திரிகிறார், பணத்தை வீணாகச் செலவு பண்ணுகிறார் என்ற எண்ணம் ஆச்சிக்கு பணம் சொத்து எல்லாம் ஆச்சி பேரில் தான் இருக்கு ஆச்சி கொடுத்துத்தான் செட்டியாருக்குப் பணம் வரவேண்டும். லாபம் இல்லாத தொழிலை, இந்தப் பத்திரிகையை ஏன் நடத்த வேண்டும் என்ற நினைப்பு ஆச்சிக்கு. அதனால்தான் 'திருமகளை சரியாக, காலம் தவறாமல், கொண்டு வரமுடியவில்லை என்று மருதப்பர் தெரிவித்தார். நான் அங்கு வந்து சேர்ந்த சமயம் 'திருமகள் ஜனவரி இதழ் வெளிவந்திருந்தது பிப்ரவரி இதழ் தயாராக வேண்டும். சில பக்கங்கள் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. அவற்றின் புரூஃப்” தாள்களை நான் திருத்தினேன். வேறு சில விஷயங்கள் தேர்வு செய்யப்பட்டுக் காத்திருந்தன. அச்சடிக்கத் தாள் வாங்க வேண்டும். அது தள்ளிப் போடப்பட்டு வந்தது.