பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

நிலையும் நினைப்பும்



யாவும் சங்க காலத்திற்கும் இக்காலத்திற்கும் மாறுபட்டிருக்கக் காரணம் என்ன? ஆரியர்—திராவிடர் பிரச்சனையை மறந்தே யோசித்துப் பாருங்கள். என்ன பதில்? இன்று ஆரியரும் திராவிடரும் இரண்டறக் சுலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்படிக் கலந்துவிட்டதாகவே ஒப்புக்கொள்ளுகிறேன், வாதத்திற்காக. இதற்கு (கலப்பதற்கு) முன்பு? பல்கலைக் கழகத்திலே நீங்கள் படிக்கிற பாடம் ஆரியர் என்றோர் இனம் அல்லது கூட்டம் பன்னெடும். ஆண்டுகளுக்கு முன்பு ஆரியாவிலிருந்து இந்தியா கோக்கி வந்தது, யாரும் மறுப்பதில்லை. வரும்பொழுது அவர்கள் ஆடு, மாடு ஒட்டிக்கொண்டு வந்தார்கள்; மறுக்கவில்லை. ஒட்டிக்கொண்டு வந்தவர்கள் சில நாட்களில் சிந்து நதி தீரத்தில் ஆரியாவர்த்தத்தைப் படைத்தார்கள்; மறுக்கவில்லை. அப்பொழுது தெற்கே தமிழ்நாடு இருந்தது; மறுக்கவில்லை. தமிழ் நாட்டில் இருந்தவர்கள் தமிழர்கள்; மறுக்கவில்லை. தமிழர்களுக்கென்று ஒரு பண்பு இருந்தது; இதையும் மறுக்கவில்லை தமிழ் நாட்டில் குடியேறிய ஆரியர்கள் சற்றேக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன் வந்தனர்; இதையும் மறுக்கவில்லை. ஆகவே, ஆரியர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள்; வந்தபொழுது தமிழர்கள் உன்னத நிலையில் இருந்தனர்--என்பதை எவரும் மறுப்பதில்லை. யாவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்கள் தமிழ்ர்களைப் பார்த்து என்ன எண்ணியிருப்பார்கள்?