பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாத்துரை 39 என்ன, அது என்ன என்று கேட்பார்கள். இது கருணை, இது சேமை, இது சீரகம், இது சோளம், இது முள்ளங்கி, என்று கிராமத்தார்கள் சொல்லு வார்கள். மாணவர்கள் கண்களிலே ஒருவித மிரட்சி தோன்றும். 'என்னங்க படிக்கிறங்கிறிங்க, இதெல் லாம் தெரியலியே” என்பார்கள். கிராமத்தார்கள். மாணவர்கள் கிராமத்து மக்களிடம் பகுத்தறிவு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். கிராமத்து மக்கள் மாணவர்களிடம், சாவடிப் பிசாசைப் பற்றியும், கிராமத்து பயிர்களைப் பற்றியும் அனு பவம் இருக்கு மென்று எதிர்பார்த்தார்கள். இரு வர்கள். எதிர்பார்த்தும் இருவர்களிடமுமில்லை. எப்படி இருக்கும், எப்படி இருக்க முடியும்' மக்கள் மாணவர்களிடம் இல்லா ததை எதிர் பார்க்கிறார்கள், மாணவர்கள் மக்களிடம் இல்லா ததை எதிர் பார்க் கிறார்கள். இல்லாததை இருவர்களும் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இருவர்கள் இருப் பதும் வெவ்வேறு இடம். இருவர்கள் எண்ணங் கள் இருப்பதும் வெவ்வேறு இடம். இருவர்களுக்கு மிடையே பெரிய பிளவு. பாலம் கட்டப்படவேண் டும். பாலத்தை, கல்வி அமைச்சர்தான் மாணவர் களைக்கொண்டு கட்டவேண்டும். கிராம மக்களுடைய மனதில் நல்லது இது, கெட்டது இது, உண்மை எது, கற்பனை எது என்று பொருள்களை பிரிக்க முடியா தபடி மாசு படிந்திருக் கிறது. மனதிலே மாசுள்ள அந்த மக்களிடம் படித்துப்பட்டமும் பகுத்தறிவும் பெற்ற மாணவர் கள் நன்மையிது தீமையிது, கற்பனை எது உண்மை