பக்கம்:நிலை விளக்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இதிலே, இந்த 225 இலட்சம் யூனிட்டுகளிலே, தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மின்சாரம் 115 இலட்சம் யூனிட்டுகள். கிட்டத்தட்ட 50 சதவீதம் தருகிறோம். விவசாயத்திற்கு இந்த 225 இலட்சம் யூனிட்டுகளிலே தருவது 45 இலட்சம் யூனிட்டுகள். 20 சதவீதம் தருகிறோம். வீட்டு உபயோகத்திற்கு 9,50,000 யூனிட்டுகள் இந்த 225 இலட்சம் யூனிட்டில் இருந்து தருகிறோம். அதாவது 4.2 சதவீதம். தெரு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படுவது இந்த 225 இலட்சம் யூனிட்டுகளிலே-கிராமத்திலே எல்லாம் லைட் போட்டுக் கெடுத்து விட்டார்கள்; அதனால் தான் பற்றாக் குறை என்று சொன்னார்களே; அதற்கு நான் சொல்லுகிற பதில் இந்த 225 யூனிட்டுகளிலே 2 இலட்சத்து 50 ஆயிரம் யூனிட்டுகள் தான். அதாவது 1 பெர்சென்ட்தான் விளக்குகளுக்கு உபயோகப்படுத்தப் படுகிற மின்சாரம். தரு சினிமாக்களுக்கு 225 இலட்சம் யூனிட்டுகளிலே உயோகப் படுத்துகின்ற மின்சாரம் ஒரு நாளைக்கு 1 இலட்சத்து 30 ஆயிர யூனிட் சதவீதம். அதாவது 0.5 சதவீதம். கடைகளுக்கு 6 இலட்சத்து 60 ஆயிரம் யூனிட்டுகள். அதாவது 3 சதவீதம். அத்தியாவசிய சர்வீஸ்களுக்கு 7 இலட்சம் யூனிட்டுகள். அதாவது 4.3 சதவீதம். குறைக்கப்பட்டது. இதிலே எந்த அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது என்றால், தொழில் நிறுவனங்களுக்கு 115 இலட்சம் யூனிட்டாக இருந்ததை, 80 இலட்சத்து 60 ஆயிரம் யூனிட்டுகளாக இப்பொழுது, இந்த 40 சதவீதம் வெட்டின் மூலம் குறைத்து இருக்கிறோம். அவர்களுக்கு, மொத்தம் மின் வழங்குவதில் 36 சதவீதம் தொழிற்சாலைக்குக் கிடைக்கிறது. விவசாயத்திற்கு 45 இலட்சம் யூனிட் அப்படியே கொடுக் கிறாம். வெட்டு இல்லை. அவர்களுக்கு மொத்த வழங்குவதில் 20 சதவீதம் வழங்குகிறோம். வீட்டு உபயோகத்திற்காக 9 இலட்சத்து ஆயிரம் யூனிட்டை 8 இலட்சத்து 70 யூனிட்டுகளாகக் குறைத்து மின் 50 ஆயிரம் இருக்கிறோம். 25 சதவீதம்- 100 யூனிட்டுக்கு மேற்பட்டால் வெட்டு என்கிற வகையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/26&oldid=1705682" இலிருந்து மீள்விக்கப்பட்டது