பக்கம்:நிலை விளக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 steps, work on opening the second mine cut has to be initiated early, in order to utilise the capacity already created, and also to tide over the perennial power shortage. என்று அந்த அறிக்கையிலே குறிப்பிட்டு, திரு. தார் அவர் களிடத்திலே அதைப்பற்றி நீண்ட நேரம் நாங்கள் கலந் துரையாடியிருக்கிறோம். மத்திய அரசு ஒன்றை மறந்து விடக்கூடாது. தொழில் வளர்ச்சியிலே மாநிலங்கள் முன்னேற வேண்டுமென்று திட்டங்களைத் தீட்டுகின்ற நேரத்தில், அந்தத் தொழில் வளர்ச்சிக்கு மிகமுக்கியமான மின்சாரத் திட்டங்களை நிறைவேற்றுவதிலே மத்திய அரசு செலுத்தவில்லை யென்பது அறை போதிய தான் என்னுடைய குற்றச்சாட்டாகும். மத்திய அரசைக் கேட்கவில்லை கேட்கவில்லை என்று கூறிவிட்டால் மாத்திரம் போதாது. மாநில அரசு தானாக முன்வந்து இங்கே ஒரு மின்சார உற்பத்திச் சாதனத்தை உருவாக்கு வதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறதா என்பதை மாநில அரசைக் குற்றம் சாட்டுகிற நேரத்தில் தொழிலதி பர்களானாலும் அல்லது மாண்புமிகு மாற்றுக் கட்சியினுடைய உறுப்பினர்களானாலும் எண்ணிப்பார்க்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்வேன். இன்றைக்குப் போடப்பட்டிருக்கிற திட்டங்களின்படி1983- 84-லே கூட நம்முடைய மாநிலத்திற்கு 1.500 மெகாவாட் உற்பத்திப் பற்றாக்குறையாக இருக்கும் என்றுதான் கணக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. நாம் போட்டிருக்கிற திட்டங்களை யெல்லாம்நிறைவேற்றிவிட்ட லுங்கூட, வளரக்கூடியதொழில் உற்பத்தியில்1983-84-ஆம் ஆண்டு 1,500 மெகாவாட் குறை வானதாகத்தான் நம்முடைய மின் உற்பத்தி இருக்கும். என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆகவேதான், மத்திய அரசு இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு இந்தக் காரியத் தைச் செய்ய வேண்டும். எட்டு ஆண்டுகளா? ஆளுநர் உரையிலே, நெய்வேலி இரண்டாவது சுரங்கம் வெட்டுவதை இப்போது ஆரம்பித்தாலும் முடிக்க 8 ஆண்டுக் காலம் ஆகும் என்று குறிப்பிட்டதை அம்மையார் அவர்கள் கேலியாகச் சொன்னார்கள். இப்பொழுது ஆரம் பித்தாலே 8 ஆண்டுக்காலம் ஆகும். அதுவரையிலே இந்த மின் வெட்டினால் பாதிக்கப்படுபவர்களுடைய கதி என்ன என்று கேட்டார்கள். இப்பொழுது ஆரம்பித்தாலும் 8 ஆண்டுக்காலம் ஆகும். என்று சொன்னதற்குக் காரணம் 1965-ல் இந்த அரசு நினைவூட்டியதை-பக்தவத்சலம் அவர் களுடைய காலத்திலே-அப்பொழுதே ஆரம்பித்திருந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/35&oldid=1705691" இலிருந்து மீள்விக்கப்பட்டது