பக்கம்:நிலை விளக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 20 வாக்காளர்கள் இல்லை. இன்று எனக்கு வந்த கடிதப்படி 4-ஆம் நம்பர் வீடு என்று 4 வீடுகள் இருக்கின்றனவாம். நம்பர் போட்டவர்கள் 4 வீடுகளுக்கும் 4 என்றே போட் டிருக்கிறார்கள். அல்ல 5 வீடுகளாம்; அதிலே 5.வீட்டில் 4 அல்லது 6 பேராக இந்த 20 ஓட்டுக்கள் சேர்க்கப்பட் டிருக்கின்றன. மொத்தத்திலேயே பார்த்தால் அதிலே ஒரு 11 ஆயிரம், இதிலே ஒரு 5 ஆயிரம் ஆக மொத்தம் 16 ஆயிரந்தான் சேர்க்கப்பட்டிருக்கிறது; 2-ஆம் தேதி வரையில் காலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக. அதையும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென்று கேட்டுத் தேர்தல் அதிகாரி சிந்தித்துக் கொண்டு இருக்கிறாராம். எங்களுக்கு அதைப்பற்றி ஆட்சேபனையில்லை. ஒரு வாரம் அல்ல, இரு வாரங்கள் கூடக் கொடுக்கலாம். நாங்கள் கவலைப்படவில்லை. அதற்குள்ளாக ஏதோ 'சூது நடந்துவிட்டது, சதி நடந்துவிட்டது' என்று ஏன் பேச ஆரம்பிக்க வேண்டும். நாம் பொறுப்புள்ளவர்கள் அல்லவா ? டை நாகர்கோயில் நாடாளுமன்றத் தேர்தலில், 1967-ஆம் ஆண்டு பிப்ரவரி பொதுத்தேர்தலில் இருந்த வாக்காளர்களின் GT GODT 60&60; 4,74,210. 1969-ஆம் ஆண்டு நடைபெற்ற த் தேர்தவின் போது 5,32,089 வாக்காளர்கள். அதிகமாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் 57,879 ஆகும். இப்படிச் சேர்ந்தது யார்? சேர்த்தது யார்? நாங்கள் யாரா வது அதைப்பற்றி பேசினோமா? அதைப்பற்றி மூச்சு விட் டோமா? ஏன் திண்டுக்கல் தொகுதியைப் பற்றி இந்த அளவுக்கு ஆரம்பத்திலேயே தவறான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? 85,611. அதேபோல் தான் தென்காசிச்சட்டப்பேரவைத்தொகுதிக்கு 1967-ஆம்ஆண்டு பிப்ரவரித் திங்களில் தேர்தல் நடைபெற்ற போது இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1968-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது வாக்காளர்கள் 87,057. அதிகமாகக் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை ஏறத் வாக்காளர்களின் தாழ 1500 ஒரு சட்டசபைத் தொகுதிக்கு. இதைப் போல் தான் திண்டுக் கல் தொகுதியிலும் ஒரு சட்டசபைத் தொகுதிக்கு 2,000 அல்லது 1,000 என்ற அளவுக்கு அதிகமாகச் சேர்ந்திருக்கிறார். கள். தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குத் தேர்தல் நடைபெற்றபோதும் 5 அல்லது 6 ஆயிரம்பேர்கள்தான் அதிக மாகச் சேர்க்கப்பட்டார்கள். அவசரமாகத் தேர்தல் அப் பொழுது நடத்தப்பட்ட காரணத்தினால் இந்த நிலைமை. இல்லாவிட்டால் இன்னும் 5 ஆயிரம் அதிகமாகி இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாம் சொன்னார்கள், ஒவ்வொரு முறை உள்ளவாக்குகளை யும் வாக்குகளைச் சேர்த்து விட்டார்கள் ; விலக்கிவிட்டார்கள்; மை வைத்துவிட்டார்கள் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/39&oldid=1705695" இலிருந்து மீள்விக்கப்பட்டது