பக்கம்:நிலை விளக்கம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 உள்ளவர்கள் ஒரு நாட்டிலே இருக்கிற 374 ஊராட்சி ஒன்றியங்களும்- அந்த ஊராட்சி ஒன்றியத்திலே கிராமத்தைத் தேர்ந்தெடுத்து—அதைநல்ல கிராமமாகச் செம்மையான கிராமமாக -தூய்மையான கிராமமாக ஆக்குவதற்கு முனையவேண்டுமென்று இந்திய அரசு மாநில அரசின் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதற் கேற்பத் தமிழ் நாட்டில் உள்ள 374 ஊராட்சி ஒன்றியங்களி லிருந்தும் 374 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எப்படி அங்கே தச்சம் பறம்பு என்ற கிராமம் தேர்ந் தெடுக்கப்பட்டதோ அதைப்போலவே கன்னியாகுமரி மாவட்டத்தில், 9 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும், தேந்தெடுக்கப்பட்டிருக்குமென்றே நான் கருது கிறேன். அப்படி அகத்தீசுவரத்திலே, முன்னேற்றக் கழகத் தினுடைய தலைவர் இல்லாவிட்டாலும், அங்கேயும் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அவர் சொன்னார் 3 லட்சம் ரூபாய் திட்டம். 44 ஆயிரம்ரூபாய் செலவாகிவிட்ட தென்று, உண்மையென்னவென்றால் திட்டம் 77 ஆயிரம் ரூபாய் இன்னும் மத்திய அரசிடமிருந்து அதுபற்றிய தாக் கீது எதுவும் வராத காரணத்தால் அந்த வேலையே ஆரம்பிக்கப் படவில்லை. எதுவும் செலவு செய்யப்படவில்லை, என்பதை நான் மாண்புமிகு உறுப்பினர் சுவாமிதாஸ் அவர்களுக்குச் சொல்லிக்கொள்ளுவேன். அது திரு பொன்னப்ப நாடார் : தச்சம்பறம்பு என்ற கிராமத்தில் 235 பேர்கள்தான் வாக்காளர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு கிராமமாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த சேர்மன் இருக்கிறார் என்ற காரணத்தி னால்தான் அதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற குற்றச் சா டு வந்து இருக்கிறது. 10 ஆயிரம் பேர்களுக்குமேல், இருக்கிற பெரிய கிராமங்கள் எல்லாம் இருக்கிற போது ஏன் இதைத் தேர்ந்தெடுத்தார்கள்? மாண்புமிகு கிராமத்தில் 235 அந்தக் முதல்வர் : பேர்கள் இருப்பதாக திரு பொன்னப்ப நாடார் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு வந்திருக்கிற தகவல் 2,074 பேர்கள். எது சரியென்று பிறகு சரி பார்த்துக்கொள்கிறேன். அங்கே மக்கள் தொகை 2,074 பேர்கள் என்றும் அதிலே 80 சதவீதம் பேர்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கின்றனர் என்றும் தகவல் வந்திருக்கிறது. நான் இப்போதே வாதிட விரும்பவில்லை,எது சரி என்று நானும் விசாரிக்கிறேன். திரு. பொன்னப்ப நாடார் அவர்களும் விசாரிக்க வேண்டும். பிறகு கிடைக்கும் தகவலை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொள்வது நல்லது. 42 ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது என்று சொன்னார்கள். இன்னும் ஒரு பைசாக்கூடச் செலவாக வில்லை என்ற தகவல் எனக்குக் கிடைத்திருக்கிறதென்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/41&oldid=1705697" இலிருந்து மீள்விக்கப்பட்டது