பக்கம்:நிலை விளக்கம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஏற்றுக் கொண்டதைப்போல எம். ஜி. ஆர். அவர்கள் பல அறிக்கைகளிலே அதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஊழல்-ஊழல் என்று பேசிக் கொண்டே யிருப்பதிலே எந்தப் பயனும் இல்லை. ஏன் கமிஷன் ? வாங்கி கமிஷன் வை, கமிஷன் வை, கமிஷன் போடு என்று. யாரைப்பார்த்தாலும் கமிஷன் போடு கமிஷன் போடு என்று கேட்டால், நாங்கள் யாரிடத்திலேயிருந்து கமிஷன் னோம்? வாங்கினாலல்லவா கமிஷன் போட. கமிஷன் போடு, கமிஷன் போடு என்றால் என்ன வேடிக்கை? விசாரணைக்குழு போடுவதற்கு மத்திய அரசுக்கு அரசியல் சட்டத்திவே டயில்லை என்று சொல்லுகிறோம். அரசியல் சட்டத்திலே இடமில்லை என்று சொல்லும் நேரத்தில் திரு. கே. டி. கே. தங்கமணி : இதே மன்றத்தில் தான் நீங்கள் சொன்னீர்கள். சான்றுகள் இருந்தால் சொல்லுங்கள். விவரங்கள் இருந்தால் சொல்லுங்கள், அப்படிச் சொன்னால் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னீர்கள். ஆகவேதான் முறையாக, சட்டப்படி, விவரங்களையெல்லாம் சேகரித்து, இப்படிக் கமிஷன் போட வேண்டுமென்று மத்திய அரசிடம் காடுத்தோம். அதுதான் முறை. இல்லாவிட்டால் தருவிலே நின்று பேசிக்கொண்டிருக்கலாம். முறையாகத் தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்தபிறகு மத்திய கமிஷன் போட வேண்டுமென்று கேட்கிறோம். ன்னமும் அப்படிச் சொல்லிக்கொண்டுதான் இருப்போம். அரசைக் மாண்புமிகு முதல்வர் : இதற்குப் பலமுறை பதில் சொல்லியாகி விட்டது. GENTL விசாரணைக் கமிஷன் திருமதி அனந்தநாயகி : வேண்டுமென்று நாங்கள் சொல்லுகிறோம். ஆனால். உங்கள் கட்சியிலே உள்ள அங்கத்தினர்கள் சொல்லுவது வேறு, அது வியாபாரிகள் சொல்லும் கமிஷன். அதை இதோடு சொல் வது எப்படி நியாயமாகும் என்று எனக்குப் புரியவில்லை. மாண்புமிகு முதல்வர் : பல விஷயங்கள் உங்களுக்குப் புரியாது. என்ன செய்வது? விசாரணைக்குழு அமைப்பதற்கு அரசியல் சட்டத்திே இடமில்லை என்று சொன்னால் அதை-அண்ணா அவர் களுடைய பல பேச்சுக்களை இங்கே எடுத்துப் படித்துர் காட்டிய திரு. கே. டி. கே. தங்கமணி அவர்களுக்கு ஞாபகப் படுத்துவேன்- -இந்தக் கருத்தை எங்கள் தலைவர் அண்ண அவர்கள் மத்திய அரசுக்குத் தமிழக அரசின் சார்பிலே எழுதியிருக்கிறார்கள். மத்திய அரசினுடைய உள்துறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/45&oldid=1705701" இலிருந்து மீள்விக்கப்பட்டது