பக்கம்:நிலை விளக்கம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அமைச்சராக இருந்த திரு. சவான் அவர்கள் 'லோக்பால்' என்ற அமைப்பை நிறுவிட எண்ணம் கொண்டு மாநில அமைச்சர்களிடத்தில் கருத்தை யறிந்தார்கள். அப்பொழுது ஒரிசாவின் முதலமைச்சராக இருந்த சிங்தேவ் அவர்கள்- சுதந்திராக் கட்சியைச் சேர்ந்தவர்கள், என்ன எழுதினார்கள், சவான் அவர்களுக்கு ! அறிஞர் அண்ணா அவர்கள், தமிழகத்தின் முதல்வராக இருந்த எங்கள் தலைவர், என்ன எழுதினார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். அண்ணா சொன்னார்கள், "Constitutionally the Central Ministers are under the control of the Prime Minister and the State Ministers are under the control of the Chief Minister-The Chief Minister is independent of Prime Minister and Home Minister. So the Chief Minister will be the authority of the State Ministers.** இது அண்ணா சொன்ன கருத்து. அதே நேரத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி 1968-ஆம் ஆண்டில் திரு சவான் அவர்களுக்கு ஒரிசாவின் முதலமைச்சராக இருந்த சிங்தேவ் அவர்கள் எழுதினார்கள், "It may not be keeping with the demands of Constitu- tional propriety that the observance of the code of conduct by the Chief Minister should be entrusted to the Prime Minister and the Union Home Minister. In order to develop proper democratic practices the State Legislature should be the authority for enforcing the observance of the code of conduct by the Chief Minister in the same way as the Parliament is the authority for ensuring the observance of the code by the Prime Minister. 33 ஓர் அரசின் முதலமைச்சர் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பை, நாட்டின் பிரதமரோ, அல்லது உள்துறை அமைச்சரோ ஏற்றுக்கொள்வது என்பது அரசியலமைப்பின் அடிப்படைக்கு உகந்ததாகாது. அரசியல் நெறிமுறைகள் வழுவாமல், நாட்டின் பிரதமர் செயல்படு கிறாரா, இல்லையா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு எப் படி நாடாளுமன்றத்திற்கு இருக்கிறதோ, அதைப் போலவே, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நெறிமுறைகள் வழுவாமல் நடக்கிறாரா, இல்லையா என்பதைக் கண்காணிக்கும் பொறுப் பும், அதிகாரமும் படைத்தது அந்த மாநிலச்சட்டமன்றந்தான். இதுதான் சிறந்த ஜனநாயகப் பண்புகளை வளர்க்க ஏதுவாக இருக்கும் என்று ஒரிசா முதலமைச்சர் சிங்தேவ் அவர்கள் கடிதம் எழுதி திரு சவான் அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். 'பிறகு 23-3-1968-ல் அண்ணா அவர்கள் அமைச் சரவையை கூட்டி அருமை நண்பர் மதியழகன் உள்ளிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/46&oldid=1705702" இலிருந்து மீள்விக்கப்பட்டது