பக்கம்:நிலை விளக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ற னார்கள். நான் அப்போழுதே அவரிடத்திலே கேட்டுக் கொண்டேன். நான் பதில் அளிக்கின்ற நேரத்திலே நீங்கள் அவசியம் இங்கே இருப்பீர்களா என்று கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக இருப்பேன் என்று அவர்கள் சொன்னார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலை என்று கருதுகின்றேன். அவர்கள் இந்த அவைக்கு இன்றைக்கு வரவில்லை. ஆகவே, தவிர்க்க முடியாத சூழ்நிலை யாருக்கும் ஏற்படுகிறது என்ப தற்கு இது எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. (இறுதி யாக முதல்வர் பேசும் போது இது பற்றி அறிவித்தது வருமாறு: நான் பேச்சை முடித்து உட்கார்ந்த பிறகு தான் கேள்விப்பட்டேன். திரு சா. கணேசன் அவர்கள். வராததைப் பற்றிச் சொன்னேன். அவர்களுடைய பேரக் குழந்தை காலமாகி விட்டதால் வராததாகக் கேள்விப் பட்டேன். ஆகவே, முதலில் நான் தெரிந்து கொள்ளாமல் சொல்லிய சில கருத்துக்களுக்காக வருத்தப்படுகிறேன்.) இந்த அவை ஜனநாயக மரபை நேர்மையான முறையில், நாகரீகமான வகையில் கடைப்பிடித்து வருகின்ற பெயரினை யும், புகழினையும் நீண்ட நெடுங்காலமாகக் கட்டிக் காத்து வருகின்ற அவையாகும். இந்த அவையிலே வ மிகப் பெரியவர்களெல்லாம் யி கருத்துக்களை வழங்கி ரு க்கின்றார்கள். நாட்டு குரலை மக்களுடைய எதிரொலித்து இருக்கின் றார்கள். அரசு எப்படி யெப்படிச் செயல்பட வேண்டுமென்று அறி வுரை களையெல்லாம் வழங்கி யிருக்கின்றார்கள். அவர்களைப் பின்பற்றி இன்றைக்கும் இந்த அவையிலே பெரிய வர்கள்பலரும் வீற்றிருக்கின்றார்கள். வயதிலே இளையவர்களா னாலும், நல்ல முதிர்ந்த அனுபவம் உடையவர்களும் இந்த அவையிலே பலர் வீற்றிருக்கின்றார்கள். கருத்துக்களை எடுத்துச் சொல்லுகிற நேரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல், கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற அமைதியான முறை ஒன்று. கருத்துக்களை எடுத்துச் சொல் லும்போது ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இருந்தால்தான் அந்தக் கருத்துக்களுக்கு விளம்பரம் கிடைக்கும். கருத்துக் களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, அட்லீஸ்டு, தனக் காவது விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணுகின்ற மற் றொரு முறை உண்டு. இந்தப் பெருமை மிகுந்த அவையைப் பொறுத்தவரையில் கருத்துக்களுக்கு விளம்பரம் கிடைக்க கொண்ட உறுப் வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைட் எண்ணி நான் பினர்கள் வீற்றிருக்கின்றீர்கள் என்பதை 25 FEB 1973

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/52&oldid=1705708" இலிருந்து மீள்விக்கப்பட்டது