பக்கம்:நிழல் முகங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 8 சு. சமுத்திரம்

"சரி. அப்படியே கேட்கேன்னு வச்சுக்கோ. அவளுகளும், பதிலுக்கு ஏதோ சொல்ல. அதுவே ரகளையாகி. ரயில்வே போலீஸ் வந்தால், ஆருக்குடா நஷ்டம்.? விவகாரமுன்னு வரும்போது, எல்லாப் பயல்களும், பொம்மனாட்டிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க. போலீஸ்காரன் நீங்க குடித்திருக்கீங்கன்னு ஒங்களைத்தான் கூட்டிப் போவான். புரியுதுங்களாடா..?

"புரியுது. புரியுது.” "பேசாமல், வாயையும் கண்ணையும் மூடிட்டுப் படுங்கடா. காத்தால பார்த்துக்கலாம்."

"காத்தால அவளுகளைப் பார்த்துக்கிறேன்னு காரண்டி கொடு. படுத்துக்கிறோம்."

"நீங்களும் பேசாமப் படுப்போமுன்னு காரண்டி கொடுங்கோ.

3.

'கொடுத்துட்டோம். கொடுத்துட்டோம். கரண்டி கொடுத்துட்டோம்."

"சரியான குடிகாரப் புயல்கடா. ஏறுங்கடா ரயிலுல."

நாராயணன் தள்ளாடிய இதுவரையும் ரயிலில் ஏற்றி விட்டான். 'மனசு கேட்க மாட்டேங்கடா மச்சான்' என்ற பலராமனும், கேட்டாளே ஒரு கேள்வி. கேட்கக்கூடிய கேள்வியா அது? என்று நவாப்ஜானும், கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொன்னபடி நின்றார்கள். நாராயணன், அவர்களை, பெட்டிக்குள் கொண்டு செல்லாமல், வாசலோரம், வால்பேஷின் பக்கத்தில் படுக்க வைத்தான். பெட்டிக்குள் வந்து இரண்டு தலையணை கொண்டு போய், அவர்களது தலையைத் துக்கி, அவற்றில் போட்டான். அவர்களையே, சிறிது நேரம், பார்த்துச் சிரித்துவிட்டு, பெட்டிக்குள் வந்து படுத்துக் கொண்டான்.

ரயில் மூச்சுவிட்டது; பிறகு சத்தம் போட்டது; அப்புறம் ஒடியது.

பலராமன், உளறிக் கொட்டியபடியே தூங்கினான்.

"பிரியாணி வாங்கிக் கொடுத்த நானாம்மே பொறுக்கி..? தயிர் சாதத்துக்கு ஊறுகாய் நிறைய போடுன்னு கடைக்காரன்கிட்டே, சண்டைக்குப் போன இந்த நவாப் பயலாம்மே பொறுக்கி..? நாங்க இல்ல, கண்ணு நீதான். எங்களைப் பொம்புள பொறுக்கின்னு சொன்ன நீ, பெர்த் கொடுத்த எங்களை டெத்தாகிட்டியே. சிஸ்டர்களே. சிஸ்டர்களே. சிஸ்டம் இல்லாத சிஸ்டர்களே."

நவாப்ஜானுக்கு, நல்ல துரக்கம். அதைக் கெடுத்துக் கொண்டு இருந்த பலராமனின் வாய்மேல் கைபோட்டான். அப்படியும் அவன்