பக்கம்:நிழல் முகங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 8Ꮽ

உளறிக் கொட்டியபோது, நவாப்ஜான் நண்பனின் உதடுகளை அசையவிடாமல் பிடித்துக் கொண்டான்.

அந்த ரயிலும் துக்கக் கலக்கத்தோடு ஓடுவது போலிருந்தது. நள்ளிரவில் காசிபேட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குமேல் அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ அதிகமாக நின்றது. அந்த ரயில் நின்ற வடபகுதிக்களில் அதிகமாக ஒலித்த இந்தி சத்தம் குறைவாகவும், குறைவாக ஒலித்த தெலுங்குச் சத்தம் அதிகமாகவும் இப்போது ஒலித்தன. ஆங்காங்கே பயணிகளின் இருமல் சத்தமும், கொட்டாவிச் சத்தமும், பிளாட்டாரச் சத்தத்துடன் கலந்தன. சிறிது நேரத்தில், ரயில் பின்னோக்கி ஓடுவது போல் ஓடியது. எல்லோருமே தூங்கிப் போனார்கள்.

காலையில் ஆறுமணி அளவில், நவாப்ஜானும், பலராமனும் கண் விழிக்கவும், அந்த ரயில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் நிற்கவும் சரியாக இருந்தது. அவர்கள் இருவரும் முகம் அலம்பிவிட்டு, எஸ். 11க்குள் தர்ம சங்கடத்துடன் வந்தார்கள். அந்த டில்லிப் பெண்களைக் கோபத்தோடு பார்த்தார்கள். திடீரென்று பலராமன் கத்தினான்.

"என்னடா ரயில்வே ஸ்டேஷன் புச்சா தோணுது..?. இன்னா ஸ்டேஷன்யா இது...? ரெய்ச்சூர் ஸ்டேஷன்னு போர்ட்ல போட்டிருக்கு என்னாய்யா சமாச்சாரம்?"

அந்தப் பக்கமாய் வந்த டிக்கெட் பரிசோதகர் விளக்கினார்.

"சரியான தூங்குமூஞ்சுப் பசங்கடா நீங்க. ரயிலை காசிபேட்டில் இருந்து வேற பாதையில் விட்டுட்டாங்க கூடுர் பக்கம் ஏதோ ஒரு ரயில் விபத்தாம். அதனால் விஜயவாடா பாதையில் ரயில் ஒடல. நல்லவேளையாய். இந்த ரயிலை வாடி வழியாய் ரெய்ச்சூர் குண்டக்கல் வழியாய் சென்னைக்கு விடுறாங்க. மெட்ராஸ் போய்ச் சேர ராத்திரி ஒன்பது மணியாகும்."

விஜயவாடாவுக்கு டிக்கட் எடுத்திருந்த தெலுங்கம்மா எழுந்து நின்றே கத்தினாள். "விதவல்லாறா. புத்திலேதா மீக்கு. கொஞ்சமுன்னு ஞான முண்டே ஈ ரயிலு எக்கடக்கி போதுன்னதே செப்பப்கூடாதா. நேனு எட்ல விஜயவாடாக்கு போவாளி. ஒ. பகவான் துடா. தேனு எட்ல விஜயவாடாக்கு போவேது. ரயிலு ஆபீஸருல மீரு நரகானிக்கி போத்தாரு..."

டிக்கெட் பரிசோதகர், அந்த அம்மாவின் கையைப் பிடித்துச் சமாதானப்படுத்தினார். அந்தம்மாவை, ரயில் கடப்பாவிற்கு வந்ததும், அங்கிருந்து பஸ் மூலமாக விஜயவாடாவிற்கு அனுப்பி வைப்பதாக வாக்களித்தார். அந்தம்மா சமாதானப்படாமல்,