பக்கம்:நிழல் முகங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் - 91

போனபோது, அந்த ரயில் பயலும், சமையல்கார அண்ணாமலையும், தமிழ்ச்செல்வியும் வந்தார்கள். தமிழ்ச்செல்வி, தெலுங்கம்மா பக்கத்தில் உட்கரர்ந்தாள். உடனே அந்தம்மா "ரயிலு ஆபீஸர்லு அந்தகு நரகானிக்கு போவுதுரு என்று கத்தினாள். கத்திக் கொண்டே இருந்தாள். அண்ணாமலை தனது தோழர்களிடம் பேசினான்.

"இன்னிக்கு தமிழ்ச்செல்வி தங்கச்சிதான். எல்லா பாத்திரங்களையும் கழுவிச்சு."

"அறிவுகெட்ட மடையா. அதுகிட்டே ஏண்டா வேலை வாங்கினே.?”

"நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேண்டா. இது கேட்கல. இந்தப் பயல்கூடத் தடுத்துப் பார்த்தான். அது, பாத்திரம் கழுவறதைத் தடுக்கும்படி என்னை கோபமாய் அடித்தான். ஆனால் தமிழ்ச்செல்வி, தங்கச்சி சாப்பிட்ட சோற்றுல பாதியளவுக்காவது வேலை பார்க்காண்டாமா"ன்னு சொல்லிச் சிரிக்குது. ஆமா. ரெய்ச்சூர் இருக்கது ஆந்திரத்திலேயா அல்லது கர்நாடகத்துலயா?”

எண்ண்ெய் கறுப்பு ஜிப்பாக்காரர், முந்திரிக் கொட்டையானார்.

"இந்த ரயில்வே நிலையத்துல சாக்கடையும் பன்றிகளும் இல்லாததில் இருந்து இது ஆந்திரத்தில் இல்லன்னு அறியப்

படனும்."

"ஸாருக்கு எந்த ஊரு?"

"பூர்வீகம் தமிழ்நாடு. கர்நாடகாவுல பெங்களுர்ல வாசம். இப்போ கடப்பாவுல பிஸினஸ்."

"அப்போ நீங்க அசல் திராவிடர்தான்."

தமிழ்ச்செல்வியின் கேள்வியையும், கடைசிக் கருத்தையும் எல்லோரும் ரசித்துச் சிரித்தார்கள். பலராமன், அந்த டில்லிப் பெண்களைக் காலி செய்யும்படிச் சொல்லப்போனான். அது தமிழ்ச்செல்விக்கும் பொருந்தும் என்று நினைத்து, பிறகு சும்மா இருந்தான்.

அந்த ரயில் கர்டுகளைக் கடந்து, பகல் பன்னிரண்டு மணியளவில் கடப்பாவில் வந்து நின்றது. எண்ணெய்க் கறுப்பர் அந்த தெலுங்குக் கிழவியைப் பார்த்து, "அம்மா கடப்பா ஸ்டேஷன் ஒச்சிந்தி. மீரு திகண்டி" என்றார். அந்தம்மாவின் பெட்டியைத் தூக்கினார்: "eரு திகண்டி" என்றார். மீண்டும் அந்தம்மாவும் அவரது ஆத்மார்த்த அன்பில் கட்டுப்பட்டு இறங்கப்போனாள்.