பக்கம்:நிழல் முகங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ

تجسیمے

அந்த ரயில், கடப்பா ரயில் நிலையத்தில், ஆமைபோல் பதுங்கிக் கிடந்தது.

இவ்வளவுக்கும் இது வழி தவறிய ரயில் என்பதால், ஏறுவோர் யாருமில்லை. இறங்குபவர்களும் ஒரு சிலரே. ஒருவேளை பிரயாணிகள் சாப்பாட்டிற்காகக் காத்து நிற்கிறதோ என்னவோ. வேறு பாதையில் இது விடப்பட்டதால், சமையலறைவாசிகள்கூட ரயில் நிலையத்தில்தான் சாப்பிட்டாக வேண்டும். தெலுங்கர் களுக்கே உரிய பச்சை மிளகாய் தோய்த்த பொறியலும், சப்பாத்தி களும் பல்வேறு வண்டிகளில் கண் சிமிட்டின. இது, தெலுங்கு நாட்டில் நிற்பதைக் குறிப்பது போல், அதோ, தெலுங்கம்மாவுடன் போகிற ஜிப்பாக்காரர் சொன்னதுபோல், ரயில்வே பிளாட்பாரம் முடிவடையும் இடத்தில் சாக்கடை ஆரம்பமாகி, பன்றிகள் அதில் பதுங்கிக் கிடந்தன. சற்று தொலைவில், பளபளப்பான பளிங்குக் கற்கள், பல்வேறு வண்ணத்தில் பல கடைகளில் சதுரம் சதுரமாக அடுக்கப்பட்டிருந்தன. வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பட்டாக்கத்திக்கும் பளிங்குக் கல்லுக்கும் பெயர் போன இந்த நகரத்தில், முன்னதுக்குப் பயந்து பின்னதைச் சொன்ன விலையில் வாங்கிப் போவார்களாம்.

நவாப் ஜானுக்கும், பலராமனுக்கும் நேற்று ராத்திரி காஞ்சனாவும், கல்யாணியும் தங்களைத் திட்டவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி. பலராம்ன், ஆச்சரியம் தாங்க முடியாமல் குதிகாலில் நின்றான். நவாப்ஜான் சொல்லும்மா.. என்ன நடந்தது" என்றான். காஞ்சனா பேசத் துவங்கினாள்.

"நீங்க படித்த பையன். பாவம். அப்பாவின்னு நினைக் கிறிங்களே. அந்தப் பயல் சீனிவாசன், நேற்று ராத்திரி எல்லோரும் தூங்கிய பிறகு."

எதிர்ச் சீட்டு சீனிவாசன், சாப்பிடப் போவது போல் எழுந்திருக்கப் போனான். விவகாரத்தை ஒரளவு யூகித்துக் கொண்ட, நவாப்ஜான், "மொத்தமாய் சாப்பிடப் போகலாம் வாத்யாரே. இப்போ என்ன அவசரம்” என்று சொன்னபடியே, சீனிவாசனைக் கழுத்தோடு சேர்த்துப் பிடித்து, அவனை இருக்கையில் இருத்தி விட்டு, தானும் உட்கார்ந்து கொண்டான். வாசனின் தொடையில், தனது வலது கையை ஊன்றிக் கொண்டு, "உம் அப்புறம்" என்றான் காஞ்சனாவைப் பார்த்து. அவள் வெளுத்து வாங்கினாள். சத்தம் போட்டுக் கை கால்களை ஆட்டி ஆட்டி, உரக்கப் பேசினாள்.