பக்கம்:நிழல் முகங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சு. சமுத்திரம்

'நல்லவேளையாய். வெளிப்படையாய். கேட்டுட்டிங்க. ராத்திரியே ஒங்ககிட்டே சொல்லணுமுன்னு நெனச்சேன். இந்தப் புண்ணியவதி கல்யாணி கெடுத்துட்டாள். நீங்க யோக்கியன்னு நினைச்சுப் பேசுறீங்க. பாருங்க. இந்தப் புறம்போக்கு சீனிவாசப் பயல். நேற்று ராத்திரி என்ன செய்தான் தெரியுமா..? தண்ணிர் குடிக்கிற சாக்கில் என் தலைமாட்டுப் பக்கம் வந்தான். என் முகத்தில் தண்ணிர்பட்டது. ஒருவேளை தற்செயலாய் கொட்டியிருப் பாரோன்னு சும்மா இருந்தேன். கொஞ்ச நேரத்துல இந்தக் காட்டு மிராண்டி என் முகத்தைத் தடவிவிடுறான். அதோ பாருங்க அவன் ஆள்காட்டி விரலுல வீக்கம். பொறுக்கிப் பயலை நல்லா கடிச்சு விட்டுட்டேன்."

கல்யாணியும், தன் பங்குக்கு அமைதியாக, சீனிவாசனைப் போன்ற வர்கள் அ ப் படித் தா ன் ந ட ப் பார்கள் என்று அனுமானத்துடன் விளக்கினாள்.

"நீங்க ரெண்டு பேரும் கொண்டு வருகிற சாப்பாட்டுல சாராயம் கலந்திருக்குமுன்னு சொல்லி. நீங்க அன்போட வாங்கிக் கொடுத்த பொருட்களைச் சாப்பிட விடாமல் எங்களைப் பட்டினி போட்டான். இவள் முகத்தைத் துடைச்சது மாதிரி என் காலையும் பிடித்தான். ஒரே சமயத்துல ரெண்டு பேரை. பண்பில்லாதவங்க. தாகத்துக்குத் தண்ணி குடிக்கிறதாய்ப் பம்மாத்து செய்த முட்டாள் மிஸ்டர்.”

"வாத்தியாருக்குத் தண்ணியா கேக்குது..? இப்போ நான் அவனுக்குத் தண்ணி காட்டப்போறேன் பாரு. டேய்."

நவாப்ஜான், பலராமனைப் பிடித்துக் கொண்டான். சீனிவாசன், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தான். அவன் தலை தானாகக் கவிழ்ந்தது. பிறகு தலையை நிமிர்த்தி, ஏதோ 'சூதுவாதில்லாமல் என்று சொல்லப்போனபோது "ஒரு பெண்ணோட முகத்தைத் தடவி விடுறதாடா சூதுவாதில்லாமல் செய்யுற காரியம்.? உன்னை நேற்றிலிருந்தே கவனிச்சுட்டு வாறேன். ஒன் வாயிலதான் நல்ல வார்த்தை வராதுன்னு நினைத்தேன். கடைசியில் என்னடான்னா. ஒன் கையிலகூட நல்ல செயல் வராது போலுக்கே. வாயைத் திறந்தே. பிச்சுப் புடுவேன் ராஸ்கோல் என்றான் மெக்கானிக் நாராயணன்.

நாராயணன் பேசி முடித்ததும் சர்தார்ஜி கத்தினார். பஞ்சாபிலோ இந்தியிலோ அல்ல. அசல் தமிழில் - அதுவும் நல்ல தமிழில்.

“ஏண்டா. என்னையாடா டெர்ரரிஸ்ட்டுன்னு சொன்னே. நானாடா. கண்ணி வெடி வைக்கிறவன்? நானாடா. எல்லோரையும்